முந்தய பக்கம்

நீட் மறுதேர்வுக்கான தேதி அறிவிப்பு!

15 May 2026, 10:41 am
நீட் மறுதேர்வுக்கான தேதி அறிவிப்பு!
<p>நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.</p><p>இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத் தாள் கசிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பாஜக பிரமுகர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். </p><p>இதனால் நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.</p><p>இதனையடுத்து நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் மறுதேர்வுக்குப் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது</p>
Share
FacebookXWhatsAppTelegram