நீட் மறுதேர்வு : நாடு முழுவதும் 22.7 லட்சம் பேர் எழுதினர்
21 Jun 2026, 9:06 pm

நீட் மறுதேர்வு : நாடு முழுவதும் 22.7 லட்சம் பேர் எழுதினர்

சென்னை, ஜூன் 21 - 2026-27 ஆம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 3 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அந்தத் தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்து, விசாரணையில் உறுதிப்படுத்தப் பட்டதையடுத்து ஒன்றிய அரசு அத்தேர்வை ரத்து செய்தது.

அதன்படி, நடத்தப்பட்ட மறுதேர்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 இடங்களிலும் உள்ள 5,500-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. மொத்தம் 22.7 லட்சத்துக்கும் மேற்பட் டோர் இத்தேர்வை எழுதினர்.

தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 307 தேர்வு மையங் களில் 1,42,489 மாணவ-மாணவிகள் தேர்வை எழுதினர். சென்னையில் மட்டும் 43 தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டிருந்தன.

தேர்வு எழுத வந்த மாணவர்களை போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர்.

முந்தைய தேர்வு ரத்து செய்யப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் இம்முறை கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன. வினாத்தாள் தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் யாரும் வெளியே விடப்படாமல் ரகசியமாக வைக்கப்பட்டனர். மாணவர்கள் ஹால் டிக்கெட், அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் வெளிப்படையான தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

செல்போன், டேப்லெட், ஸ்மார்ட் கைக்கடிகாரம் மட்டுமன்றி பேனாகூட எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட வில்லை. தேர்வுக்கான சிறப்புப் பேனா தேர்வு அறையிலேயே வழங்கப்பட்டது.

நீட் தேர்வு தேவையில்லை: அமைச்சர்

இதற்கிடையே, மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், “நீட் தேர்வே தேவையில்லை என்பது தமது நிலைப்பாடு. பாஜக ஆளும் மாநி லங்களில்தான் தவறுகள் நடக்கின்றன” எனக் கூறினார்.