தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் மறுதேர்வு வருகை விகிதம் வரலாறு காணாத சரிவு! தேர்வு மைய வாரியான புள்ளிவிவரங்களை வெளியிடுமா மோடி அரசு?

yesterday
நீட் மறுதேர்வு வருகை விகிதம் வரலாறு காணாத சரிவு! தேர்வு மைய வாரியான புள்ளிவிவரங்களை வெளியிடுமா மோடி அரசு?

நீட் மறுதேர்வு வருகை விகிதம் வரலாறு காணாத சரிவு! தேர்வு மைய வாரியான புள்ளிவிவரங்களை வெளியிடுமா மோடி அரசு?

புதுதில்லி/சென்னை, ஜூன் 22 - கடந்த மே 3 அன்று நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட்-யுஜி மருத்துவ நுழைவுத் தேர்வு, வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு புகார்களைத் தொ டர்ந்து ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமை ஜூன் 21 அன்று மறுதேர்வை நடத்தியது. இந்த மறுதேர்வில் மாணவர்களின் வருகை விகிதம் வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளதும், நாடு முழுவ தும் பல்வேறு தேர்வு மையங்களில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும் கல்வி வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், மறுதேர்வு எழுதிய மாண வர்களின் தேர்வு மைய வாரியான துல்லிய மான வருகை விவரங்களை தேசிய தேர்வு முகமை உடனடியாக பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் (SFI) ஒன்றிய அரசை வற்புறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மிகமோசமாக சரிந்த வருகை விகிதம்

மறுதேர்வில் மாணவர்களின் வருகை விகிதம் எந்த அளவுக்குக் குறைந்துள்ளது என்ப தற்குத் தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்க ளின் புள்ளிவிவரங்களே சான்றாக அமைந்துள் ளன. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் தேர்வுக்கும் மறுதேர்வுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அசுரத்தனமான இடைவெளி, இந்தத் தேர்வு முறையின் மீதான நம்பகத் தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மே 3 அன்று நடைபெற்ற முதல் தேர்வில், தூத்துக்குடி மாவட்டத்தில் 1,968 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் 1,905 பேர் தேர்வு எழுதிய நிலையில், வராமல் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 63 ஆக மட்டுமே இருந்தது. அதாவது, வருகை விகிதம் 96.8 சதவிகிதமாகவும், ஆப்சென்ட் விகி தம் வெறும் 3.2 சதவிகிதமாகவும் இருந்தது. ஆனால், ஜூன் 21 அன்று நடைபெற்ற மறு தேர்வில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. இம்முறை 2,015 மாணவர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 1,481 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றுள்ளனர். 534 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இதன் மூலம் ஆப்சென்ட் விகிதம் 26.5 சதவிகிதமாகக் கடுமை யான உயர்வைச் சந்தித்துள்ளது. முதல் தேர்வு டன் ஒப்பிடும்போது வராத மாணவர்களின் எண்ணிக்கை 63-லிருந்து 534 ஆக உயர்ந்துள்ளது கல்வி வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் இந்த நிலைமை ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரதி பலிப்பாகவே பார்க்கப்படுகிறது. கோயம் புத்தூரில் தேர்வு எழுதப் பதிவு செய்திருந்த 7,092 மாணவர்களில், 1,728 பேர் தேர்வுக்கு வரவில்லை என்று செய்திகள் வெளியாகி யுள்ளன. அங்கு வருகை விகிதம் 75.63 சத விகிதமாக மட்டுமே பதிவாகியுள்ளது. இதே போல் திருச்சிராப்பள்ளியிலும் மந்தமான சூழலே நிலவியது. அங்கு நடத்தப்பட்ட மறுதேர்வில் 1,799 மாணவர்கள் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். பிற தேர்வு மையங்க ளிலும் இத்தகைய முறையற்ற வருகை விகித மாறுபாடுகள் பரவலாகக் காணப்படுகின்றன.

அகில இந்திய அளவில் 2 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்: பின்னணியில் உள்ள துயரம்

அகில இந்திய அளவிலும் இந்த வருகை விகிதக் குறைவு பெரும் சந்தேகங்களையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. முதல் தேர்வில் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்றதா கக் குறிப்பிட்ட தேசிய தேர்வு முகமை, தற்போ தைய மறுதேர்வு குறித்து வெளியிட்டுள்ள அதி காரப்பூர்வ அறிக்கையில் “20 லட்சத்திற்கும் அதிகமானோர்” எழுதியதாக மழுப்பலாகத் தெரிவித்துள்ளது. இதன்படி கணக்கிட்டால், சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்த மறுதேர்வை எழுத வரவில்லை என்பது தெளிவாகிறது. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மாணவர்கள் ஏன் பின்வாங்கினார்கள் என்ற கேள்விக்கான விடை, இந்த அமைப்புகள் ஏற்படுத்திய உளைச்சலில் ஒளிந்திருக்கிறது.

தேர்வு ரத்து, தொடர் குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற காரணங்களால் மாணவர்களும் அவர்தம் குடும்பத்தினரும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளனர். தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்ச கத்தின் தொடர் தோல்விகளால், நாடு முழுவதும் சுமார் 20 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு மாண்ட விபரீதமும் அரங்கேறி யுள்ளது. தொடர் குழப்பங்கள், பயணச் சிரமங்கள் மற்றும் தேர்வு முகமையின் மீதான நம்பிக்கையின்மை காரணமாக, நடுத்தர மற்றும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்விலிருந்து கட்டாயமாகப் புறந்தள்ளப் பட்டு, பொருளாதார மற்றும் மன ரீதியான துய ரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒன்றிய அரசின் மவுனமும் கொள்கைத் தோல்வியும்

இந்த ஒட்டுமொத்த சூழலும், மோடி அரசு தீவிரமாக முன்மொழிந்து வரும் ‘ஒரே நாடு, ஒரே தேர்வு’ என்ற கொள்கையின் படுதோல்வி யையும், தேசிய அளவிலான தேர்வுகளின் நம்ப கத்தன்மையைக் காப்பதில் தேசிய தேர்வு முக மையின் திறமையின்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இவ்வளவு பெரிய முறை கேடுகள் நடந்தும், லட்சக்கணக்கான மாணவர்க ளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடர்ந்து மவுனம் காப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம். சஜி மற்றும் பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், தேசிய தேர்வு முகமையின் இந்த முறை யற்ற செயல்பாடுகள் மாணவர்களைக் கல்விக் கட்டமைப்பிற்குள் இருந்து தனிமைப்படுத்துவ தாகக் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், தேசிய தேர்வு முகமை உடனடியாக அனைத்து மையங்களின் வருகை விவரங்களை வெளியிட வேண்டும் என்றும், ஆய்வாளர்களும், பேரா சிரியர்களும், கல்வித்துறையினரும் ஒன்றி ணைந்து இந்த மர்மமான மாணவர் வருகைக் குறைவு குறித்துக் கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும் அவர்கள் அறைகூவல் விடுத் துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.