நீட் மறுதேர்வு - 38 நாட்களில் 13 மாணவர்கள் தற்கொலை!
20 Jun 2026, 6:04 pm

நீட் மறுதேர்வு காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால், நாடு முழுவதும் கடந்த 38 நாட்களில் 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு காரணமாக கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த மே 12-ஆம் தேதி தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதை தொடர்ந்து நீட் மறுதேர்வு ஜூன் 21, 2026 அன்று நடைபெறும் என அறிவித்தது. நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, 38 நாட்களில் ராஜஸ்தான் (2), கோவா (1), மத்தியப் பிரதேசம் (2), தமிழ்நாடு (2), குஜராத் (1), உத்தரகாண்ட் (1), உத்தரப் பிரதேசம் (2), தில்லி (1), மகாராஷ்டிரா (1) ஆகிய மாநிலங்களை சேர்ந்த 13 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட மாணவர்களில் பலர், மே 3-ஆம் தேதி நடந்த தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும், தேர்வு ரத்து செய்யப்பட்டதும் மீண்டும் தயாராக வேண்டிய சூழல் அவர்களுக்கு கடும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியதாகவும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், நாடு முழுவதும் நீட், கியூட் உள்ளிட்ட தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் மற்றும் மாணவர்களின் தற்கொலைக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உட்பட பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.