தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் முறைகேட்டுக்கு எதிரான போராட்டம் வெற்றி! மதுரையில் மாணவர்கள் - வாலிபர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்

yesterday
நீட் முறைகேட்டுக்கு எதிரான போராட்டம் வெற்றி! மதுரையில் மாணவர்கள் - வாலிபர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்
<p><strong>நீட் முறைகேட்டுக்கு எதிரான போராட்டம் வெற்றி! மதுரையில் மாணவர்கள் - வாலிபர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்</strong></p><p>மதுரை, ஜூலை 25- நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித் தும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் நடைபெற்ற தில்லிப் போராட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மதுரையில் ஆதரவு போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். நீட் தேர்வில் நடைபெற்றதாகக் கூறப் படும் முறைகேடுகளுக்கு எதிராகவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிர தான் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் மதுரையில் தொடர்ந்து நான்காவது நாளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. கடந்த சில நாட்களாக காத்திருப்பு போராட்டம், மறியல் போராட்டம், ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு வடி வங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை “விழித் தெழுவோம்! இந்தியாவை விழித்தெழச் செய்வோம்!” என்ற முழக்கத்துடன் நீட் தேர் வுக்கு எதிராகவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலி யுறுத்தியும் கருத்தரங்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை பொதுவெளியில் போராட்டம் நடத்த காவல் துறையினர் அனுமதி மறுத்ததால், மக பூப்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவல கமான கே.பி.ஜானகியம்மாள் – ஏ. பால சுப்பிரமணியம் நினைவகத்தில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் காத்தி ருப்பு போராட்டம் தொடங்கியது. இந்தப் போராட்டத்தில் வாலிபர் சங்கம், மாணவர் சங்கம், மாதர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இஸ்லாமிய அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட வர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரை யாற்றினர். சமூக வலைதளங்கள் மூலமாக வும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து ஆத ரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டத்தின் போது இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாநிலக் குழு உறுப்பி னர் சுகஸ்ரீ செய்தியாளர்களிடம் கூறியதா வது: “மதுரையில் நான்காவது நாளாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறோம். சென்னையில் போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், மதுரையில் அனு மதி மறுக்கப்பட்டது. அதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவல கத்தில் அனுமதி பெற்று இந்த காத்திருப்பு போராட்டத்தை நடத்தினோம். தற்போது சமூக வலைதளங்களில் ‘நியா யமான நீட் வேண்டுமா அல்லது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமா?’ என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. ‘தென்னிந்தியாவில் மட்டும் ஏன் நீட் தேர்வை ரத்து செய்யக் கோருகிறீர்கள்?’ என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது. எங்களின் பதில் தெளிவானது. பல ஆண்டுகளாக ஒரு முறைகூட நேர்மையாக வும் வெளிப்படையாகவும் நடத்த முடியாத ஒரு தேர்வை தொடர்ந்து நடத்துவதற்கு எந்த நியாயமும் இல்லை. அதனால்தான் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண் டும் என்று வலியுறுத்துகிறோம். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார். இந்நிலையில் ஒன்றிய பாஜக அரசு - ஜேசிபி இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதைத் தொட ர்ந்து, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் அறிவிப்பு வெளியிடப்பட்ட தையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட் டது. இதனையொட்டி இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவரும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.