நீட் தேர்வை ரத்து செய்க! அமைச்சர் தர்மேந்திர பிரதானே ராஜினாமா செய்க! தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் கல்லூரி மாணவர்கள் ஆவேச போராட்டம்
24 Jul 2026, 10:07 pm

நீட் தேர்வை ரத்து செய்க! அமைச்சர் தர்மேந்திர பிரதானே ராஜினாமா செய்க! தூத்துக்குடி, நெல்லை, தென்காசியில் கல்லூரி மாணவர்கள் ஆவேச போராட்டம்

தூத்துக்குடி, ஜுலை 24- நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந் திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வெள்ளியன்று தூத்துக் குடி, நெல்லை, தென்காசியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆவேச போராட் டம் நடைபெற்றது.

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும் புதுதில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் காத்திருப்பு உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், முறைகேடுகளுக்குப் பொறுப் பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந் திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வலி யுறுத்தியும் மாவட்ட அளவில் “ஜந்தர் மந்தர் தளம் “ அமைத்து தொடர் போராட்டம் நடை பெற்று வருகிறது. மூன்றாவது நாளாக தூத்துக்குடி வஉசி கல்லூரி நுழைவாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க வ.உ.சி கல்லூரி கிளைச் செயலாளர் வெற்றி செல்வன் தலைமை வகித்தார்.

மாவட்டத் தலைவர் மாடசாமி, மாவட்ட செயலாளர் ராம்குமார், மூட்டா மண்டல இணைச் செயல ாளர் சிவஞானம் ஆகியோர் பேசினர். ஏராள மான மாணவ, மாணவிகள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தென்காசி தென்காசி மாவட்டம் சுரண்டை காமரா ஜர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி யில் இந்திய மாணவர் சங்க மாவட்ட செய லாளர் மதன் தலைமையில் போராட்டம் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் மாயகண்ணன், தனஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாதர் சங்கத்தினர் கைது தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை யில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை முன்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினரின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி நகர டி.எஸ்.பி. சுனில் குமார் தலைமையிலான காவல்துறையினர், வலுக்கட்டாயமாகப் பிடித்துக் காவல் வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர்.

இப் போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டச் செய லாளர் ஜானகி தலைமை தாங்கினார். மாநி லத் துணைத் தலைவர் பூமயில் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கருப்பு உடை அணிந்து மாணவிகள் போராட்டம் தில்லியில் மாணவர்கள் மீது நடத்தப் பட்ட தாக்குதலைக் கண்டித்து, தூத்துக்குடி யில் செயின்ட்மேரீஸ் மகளிர் கல்லூரியில் மாணவிகள் கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாகத்திற்குள் ஒன்றுதிரண்ட 2,000-க்கும் மேற்பட்ட மாணவிகள், போராடு பவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் மாணவர் உரிமைகளை வலியுறுத்தும் வாச கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வாறு முழக்கமிட்டனர்.

திருநெல்வேலி நெல்லை மாவட்ட கல்லூரிகளில் இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் மாண வர்கள் வகுப்புகளை புறக்கணித்தும் மறியல் போராட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்டத்தில் அரசு சட்ட கல்லூரி, மானூர் அரசு கலைக் கல்லூரி ,ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, பாபநாசம் திருவள்ளவர் கல்லூரி,ம.தி.த. இந்து கல்லூரி, ம.சு.பல்கலைகழகம் உட்பட 7 கல்லூரி களில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலா ளர் சைலஸ் அருள்ராஜ், மாவட்ட தலைவர் சுரேஷ் கிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது.

இதில் மாநிலக்குழு உறுப்பினர் பாலசித்ரா உட்பட ஆயிரக்கணக்கான மாண வர்கள் பங்கேற்றனர். மதியம் நெல்லை வண்ணார்பேட்டை யில் மறியல் போராட்டம் நடைபெற்றது.மறிய லில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.