தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நாளுக்கு நாள் வலுக்கும் போராட்டம் ஆளுநர் மாளிகை நோக்கி மாணவர் - வாலிபர்கள் பேரணி!

23 Jul 2026, 9:00 pm
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நாளுக்கு நாள் வலுக்கும் போராட்டம் ஆளுநர் மாளிகை நோக்கி மாணவர் - வாலிபர்கள் பேரணி!

நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் நாளுக்கு நாள் வலுக்கும் போராட்டம் ஆளுநர் மாளிகை நோக்கி மாணவர் - வாலிபர்கள் பேரணி!

சென்னை, ஜூலை 23 - நீட் தேர்வை ரத்து செய்ய வேண் டும்; 21 மாணவ - மாணவியரின் தற்கொ லை, வினாத்தாள் கசிவு ஆகியவற்று க்குப் பொறுப்பேற்று, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, தமிழ கத்தில், இந்திய மாணவர் சங்கம் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும் போராட்டம் மேலும் தீவிர மடைந்துள்ளது. காவல்துறை தாக்குதல், கைது நடவடிக்கைகளையும் தாண்டி, மாணவர்களும் இளைஞர்களும் போரா ட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், மூன்றாவது நாளான, வியாழனன்று (ஜூலை 23) ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் சென்றனர். மதுரை மாவட்டம் திருப்பர ங்குன்றத்தில் ரயில் மறியலிலும், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் காத்திருப்புப் போரா ட்டங்களிலும் ஈடுபட்டுக் கைதாகினர்.

ஆளுநர் மாளிகை நோக்கி...

சென்னை சின்னமலையிலிருந்து மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சி. மிருதுளா, செயலாளர் தௌ. சம்சீர் அகமது, வாலிபர் சங்க மாநிலச் செயலா ளர் எஸ். கார்த்திக், பொருளாளர் தீ. சந்துரு தலைமையில் நூற்றுக்கணக் கானோர் முழக்கங்களை எழுப்பியபடி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வல மாக சென்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எஸ். கார்த்திக், “தில்லியில் ஜூன் 22 இரவும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம். வினாத் தாள் கசிவு - ஊழல் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும், மாண வர்கள் - இளைஞர்கள் மீதான பொய் வழக்குகளை தில்லியில் மட்டுமல்ல, தமிழகத்திலும் திரும்பப்பெற வேண்டும்; ஜந்தர் மந்தர் போல, சென்னையிலும் போராடுவதற்கு இடம் ஒதுக்கித் தரவேண்டும்” என்றார்.

புதுக்கோட்டையில் போலீஸ் அராஜகம்

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில், தமுஎகச மாநிலத் துணைத் தலைவர் நா. முத்துநிலவன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஜனார்த்தனன், செயலாளர் ஆர். மகாதீர், துணைச்செயலாளர் குமரே சன், மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் ஆர். வசந்தகுமார் தலைமையில் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர். அப்போது, “மாநில அமைச்சர் ராஜ்மோகன் முறையாக அனுமதி பெற்று போராட்டம் நடத்த தடை யில்லை எனத் தெரிவித்து உள்ளார். நாங்கள் காவல் நிலையத்தில் முறை யாக அனுமதி கேட்டு இருந்தோம். நீங்கள் ஏன் அமைதியான ஜனநாயக போராட்டத்திற்கு அனுமதி மறுக் கிறீர்கள்?” என்று மாணவர் - வாலிபர் சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பினர். இதனை ஏற்க மறுத்த காவல்துறை யினர் கைது நடவடிக்கையில் இறங்கவே, ஆவேசமடைந்த மாண வர்கள் - வாலிபர்கள், சாலைமறியல் போராட்டத்தில் இறங்கினர். பின்னர், போலீசாரே ஒதுக்கித் தந்த இடத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர். ஆனால், திடீரென சுற்றி வளைத்த போலீசார் வலுக்கட்டாயமாக, மூர்க்கத் தனமாக கைகளை முறுக்கியும், சாலையில் தரதரவென்று இழுத்தும் அராஜகமான முறையில் கைது செய்தனர். இதனால் பேருந்து நிலையப் பகுதி போர்க்கோலம் போல மாறியது.

வாலிபர் சங்கத் தலைவரை தாக்கிய டிஎஸ்பி

அதுமட்டுமல்லாது, தனியார் மண்டபத்தில் அடைப்பட்டவர்களிடம் செல்போன்களை பறித்தும், ஆதார் அட்டைகளை கேட்டும் போலீசார் கடு மையாகவே நடந்து கொண்ட நிலை யில், இதை தட்டிக்கேட்ட வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஜனார்த்த னை, காவல் துணைக் கண்காணிப்பா ளர் பிருந்தா கன்னத்தில் அறைந்துள்ளார். சிபிஎம் கண்டனம் இதையடுத்து, கைதானவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்ன துரை, மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர் உள்ளிட்டோர் சந்தித்தனர். இதை யொட்டி அறிக்கை ஒன்றை வெளி யிட்டுள்ள சிபிஎம் மாவட்டச் செயலா ளர் எஸ். சங்கர், “ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய வாலிபர், மாண வர் சங்கத் தோழர்கள் மீது, போலீசார் காட்டியுள்ள அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அமைதியான போராட்டத்தை போலீ சார் வன்முறைக்களமாக மாற்று வதற்கு முயற்சிக்கின்றனர்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சியில் பிரதான் உருவபொம்மை எரிப்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் அறி வித்த 48 மணி நேரக் காத்திருப்புப் போரா ட்டம், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் நெடுஞ்சாலையில் 2-ஆவது நாளாக தொடர்ந்தது. அப்போது, வாலிபர் சங்க த்தின் மாநகர் மாவட்டத் தலைவர் சந்தோஷ், இந்திய மாணவர் சங்கத்தின் மாநகர் மாவட்டச் செயலாளர் சூர்யா ஆகியோர் தலைமையில் தர்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளு -முள்ளும் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சுபாஷ், நிர்வாகிகள் சரவணன், துளசி, தௌபிக், ரவி விக்னேஷ் மற்றும் மாண வர் சங்க நிர்வாகிகள் ராஜேஷ், முத்து, வீரா, கமலேஷ், கிறிஸ்டோபர் உட்பட 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறை யினர் வலுக்கட்டாயமாக குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்று கைதுசெய்தனர்.

திருப்பரங்குன்றத்தில் ரயிலை மறித்த மாணவர்கள் - இளைஞர்கள்!

திருப்பரங்குன்றத்தில் வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ். பாலா தலைமையில் ஏராளமானோர் பேரணியாக சென்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தவே, ரயில் நிலைய நுழைவுவாயில் முன்பு மறியல் நடை பெற்றது. எனினும், மாதர் சங்க மாநிலச் செய லாளர் எஸ்.கே. பொன்னுத்தாய் தலைமையில் மாணவர்கள் - இளைஞர்கள் ரயில் நிலை யத்திற்குள் சென்று பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயிலை மறித்தனர். அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துத் தள்ளினர். இதில், மாணவர் சங்கத்தைச் சேர்ந்த குரு கணேஷ், சபீர் ஆகிய இருவருக்கு கை முறிவு ஏற்பட்டது. வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் வேல்தேவா, அசோக், மாணவர் சங்கத்தைச் சேர்ந்த தமயந்தி, துளசி, மாதர் சங்கத்தைச் சேர்ந்த புனிதா ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி செந்தில்குமார் மற்றும் மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் டேவிட் ராஜதுரை ஆகியோரின் சட்டை கிழிக்கப்பட்டது. மேலும், மாதர் சங்க நிர்வாகிகளை ரயில்வே தண்டவாளத்தில் தரதரவென இழுத்துச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர். இந்தப் போராட்டத்தில் வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் வெ. கருப்பசாமி, செயலாளர் டி. தமிழரசன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் உமா மகேஸ்வரன், துணைத்தலைவர் பிரேமா, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் செந்தில், ராதாகிருஷ்ணன், மாதர் சங்க மாவட்டத் தலைவரும் மாநகராட்சி கவுன்சிலருமான என். விஜயா, செயலாளர் எஸ். சரஸ்வதி, வாலிபர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் டி. செல்வா, செயலாளர் எஸ். வேல்தேவா, பொருளாளர் கா. கௌதம் பாரதி, மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டீலன் ஜஸ்டின், செயலாளர் டேவிட் ராஜதுரை, மாதர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான வை. ஜென்னியம்மாள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.