நீட் எதிர்ப்பு எழுச்சியின் நான்காம் நாள் ‘துரித நீதிமன்றங்கள்’ என்ற ஏமாற்று நாடகத்தை நிராகரித்தனர் மாணவர்கள்
23 Jul 2026, 8:57 pm

நீட் எதிர்ப்பு எழுச்சியின் நான்காம் நாள் ‘துரித நீதிமன்றங்கள்’ என்ற ஏமாற்று நாடகத்தை நிராகரித்தனர் மாணவர்கள்

பிரதமர் மோடியின் பதிலால் தீவிரமடையும் போராட்டம்

புதுதில்லி, ஜூலை 23— தில்லி ஜந்தர் மந்தரில் மாண வர்-இளைஞர் எழுச்சி ஜூலை 23 வியாழனன்று நான்காம் நாளை எட்டிய நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் மௌனம் கலைந்துள்ளது. ஆனால், போராட் டக்காரர்களின் முக்கியக் கோரி க்கையான கல்வி அமைச்சர் தர்மேந் திர பிரதானைப் பதவி நீக்கம் செய்வ தையோ அல்லது முறையான பொறுப்பேற்பதையோ தவிர்த்து விட்டு, துரித நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்ற ஒற்றை அறிவிப்பை எக்ஸ் தளம் வழியாக பிரதமர் வெளியிட்டுள்ளார். மாண வர்களும் எதிர்க்கட்சிகளும் இந்தத் துரித நீதிமன்ற அறிவிப்பை உடனடி யாகவும் திட்டவட்டமாகவும் நிரா கரித்துள்ளனர்; இது ஒரு திசை திருப்பல் நாடகம் என்றும், குரூர மான கேலி என்றும் சாடியுள்ளனர். அரசாங்கத்தின் இந்த மழுப்பலான பதிலைக் கண்டித்து, ஜந்தர் மந்தரில் மாணவர் கூட்டம் மேலும் அலைமோதியது; தில்லியின் முக்கியப் பகுதிகள் முடங்கின.

ஜந்தர் மந்தர் போராட்டக் களம் : நான்காம் நாள்

ஜூலை 22 மற்றும் 23-ன் ஊடான இரவிலும், வியாழக்கிழமை காலை யிலும் ஜந்தர் மந்தர் மற்றும் அதனை ஒட்டியுள்ள நாடாளுமன்ற வீதி, டால்ஸ்டாய் மார்க், ஜன்பத் சந்திப்புப் பகுதிகளில் போராடும் மாணவர்கள் - இளைஞர்கள் தங்க ளது நிலையை உறுதியுடன் தக்க வைத்துக் கொண்டனர். ஜூன் தொடக்கம் முதல் இந்தப் போரா ட்டத்தை முன்னெடுத்துவரும் காக்ரோச் ஜனதா கட்சி, ஆயிரக்கண க்கான போராட்டக்காரர்கள் தொடர்ந்து கலந்துகொண்டுள்ள தாகத் தெரிவித்துள்ளது. களத்தில் செய்தி சேகரிக்கும் அல் ஜசீரா நிருபர் நீஹா பூனியா, திங்கட்கிழ மை காவல்துறை ஒடுக்குமுறைக்கு பிறகு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டதாகவும், மாண வர்களின் உறுதிப்பாடு மேலும் பல மடைந்துள்ளதாகவும் குறிப்பிடு கிறார். இடிவி பாரத் செய்தி களின்படி, பாதுகாப்பு பலப்படுத்தப் பட்ட போதிலும் காலை வேளையில் கூட்டம் மீண்டும் பெருமளவில் அதிகரித்தது.

பிரபல பிரதான செய்தி ஊட கங்கள் போராட்ட வீரியத்தைக் குறைத்து மதிப்பிட முயல்கின்றன. இந்தப் போராட்டம் பரந்த அள வில் கூட்டு அமைப்பாக உருவெடு த்துள்ளது. அபிஜித் தீப்கேவால் நிறுவப்பட்ட காக்ரோச் ஜனதா கட்சி அமைப்புடன், இடதுசாரி மாணவர் அமைப்புகளான மாண வர் சம்மேளனம், இந்திய மாணவர் சங்கம் மற்றும் அகில இந்தியமாணவர் சம்மேளனம் ஆகியவற்றுடன் ஜனநாயக வாலிபர் சங்கம் கிராந்திகாரி யுவா சங்காத்தன் உள்ளிட்ட பல குழுக்களும் தீவிரமாகக் களம் கண்டுள்ளன.

இந்நிலையில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அபிஜித் தீப்கே, போராட்டத்தை சீர்குலைக்க வெளியில் இருந்து கூலிப்படை யினர் அனுப்பப்படுவதாகக் குற்றம்சாட்டினார். மோடி அரசால் முழு தில்லியையும் மூட முடி கிறது, ஆனால் தர்மேந்திர பிரதானை நீக்க மட்டும் முடியவில்லை என்று அவர் சாடினார். நான்காம் நாளான வியாழனன்று அரசின் நடவடிக்கை மிகவும் வன்முறையாக இருந்தது. தில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ராஜீவ் சௌக், ஜன்பத், மண்டி ஹவுஸ், மத்திய செயலகம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட 16 மெட்ரோ நிலையங்களை மறு அறிவிப்பு வரும் வரை மூடியது. ஜந்தர் மந்தர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முந்தைய நாள் மாலை முதல் நடமாடும் இணையச் சேவை முடக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றம் தொடர்ந்து ஸ்தம்பிப்பு நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் நான்காம் நாளாக வியாழனன்றும் தொடர்ச்சியான ஒத்திவைப்புகளைச் சந்தித்து முற்றிலுமாக முடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு, மாணவர்கள் மீதான காவல்துறை ஒடுக்குமுறை மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாக மக்களவையும் மாநிலங்களவையும் சில நிமிடங்கள் மட்டுமே செயல்பட்டன.

காங்கிரஸ் எம்பி ரந்தீப் சிங் சுர்ஜேவாலா மாநிலங்களவையில் விதி 267-ன் கீழ் ஒத்திவைப்புத் தீர்மானம் சமர்ப்பித் தார். விவாதிக்கத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவும், எதிர்க்கட்சிகள் விவாதத்தைத் தவிர்ப்பதாக சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டாவும் வாதிட்டனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவித்தார்: நியாயமான விவாதம் நடைபெற வேண்டு மென்றால், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முதலில் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மக்கார் துவாரில், என்.டி.ஏ மற்றும் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நடத்திய எதிரெதிர் முழக்கங்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வத்ரா மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டு பிரதானின் ராஜினாமா கோரி முழக்கமிட்டனர்.

பிரியங்கா காந்தி வத்ரா கூறுகையில், மாணவர்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், அவர்களுடன் உரையாடுங்கள்; நாட்டின் அமைப்பின் மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் நின்று விவாதிக்கத் தைரியம் இல்லை என்றும், துரித நீதிமன்ற அறிவிப்பு அவரது அச்சத்தையே காட்டுகிறது என்றும் கடுமையாக விமர்சித்தார்

. பிரதமரின் அறிவிப்பும் மாணவர்களின் நிராகரிப்பும் இந்தப் பின்னணியில், பிரதமர் நரேந்திர மோடியின் எக்ஸ் தளப் பதிவு வெளியானது. அதில் அவர், “நம் இளைஞர்களின் நலனை விடவும் எதிர்காலத்தை விடவும் முக்கிய மானது வேறொன்றும் இல்லை! வினாத்தாள் கசிவுகளில் ஈடுபடுபவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக துரித நீதிமன்றங்களை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அத்தகைய நீதிமன்றங்களின் எண்ணிக்கை, அதிகார வரம்பு அல்லது காலக்கெடு குறித்த எந்தவொரு விவ ரமும் அதில் இடம்பெறவில்லை. தேசிய தேர்வு முகமை சீர்திருத்தங்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான இழப்பீடு அல்லது உயர்நிலைக் குழு குறித்த எந்த அறிவிப்பும் இதில் இல்லை. காங்கிரஸ் தரப்பில் ஜெய்ராம் ரமேஷ் இந்த அறிவிப்பை மிகக் குறைவானது, மிகத் தாமதமானது மற்றும் மிகவும் ஏமாற்றுத்தலானது என்று நிராகரித்தார். சிபிஐ மூலமாக முக்கிய குற்றவாளி சஞ்சீவ் முக்கியா தப்பிக்க அனுமதிக்கப்பட்டதையும், 2024 யுஜிசி - நெட் தேர்வு ரத்து அறிக்கையை யும் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம் தொடர்ந்து பொய் கூறுவதாகக் குற்றம் சாட்டினார்.

பிரதான் பதவி விலக வேண்டும், மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மூன்று கோரிக்கைகளை அவர் முன்வைத்தார். ராகுல் காந்தி தனது கண்டனத்தில், நம் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு மிகவும் தீங்கு விளைவித்தவர் நீங்கள்தான் என்றும் கல்வி அமைப்பு அழிக்கப்படுவதை நீங்கள் ஊக்குவித்தீர்கள் என்றும் கூறி பிரதானின் பதவி விலகலை வலியுறுத்தினார். சிஜேபி தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா இந்த அறிவிப்பை ஒரு கொடூர மான கேலி மற்றும் திசைதிருப்பல் நாடகம் என்றார்.

இந்தியாவில் துரித நீதிமன்றங்கள் இல்லாததால் கசிவுகள் நடக்கவில்லை என்றும், பிரதானின் திறமையின்மையே காரணம் என்றும் அவர் சாடினார். தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதே மாணவர்களின் ஒற்றைக் கோரிக்கை யாக உள்ளது எனத் தெரிவித்தார். மாணவர் குரல்களை மிருகத்தனமாக ஒடுக்கும் மோடி அரசு தார்மீக அடிப்படையில் பதிலளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், கொள்கை மட்டத்தி லான மாற்றங்கள் எதையும் செய்யாமல் கணக்குகளைக் காட்டும் வேலை இது என்று கடுமையாக விமர்சித்தார். இந்தியா கூட்டணிக் கூட்டமும் ஒற்றைப் பரிமாண வியூகமும் முன்னதாக வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறையில் இந்தியா கூட்டணி எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றி ணைந்து அன்றைய நாளுக்கான நாடாளுமன்ற மற்றும் போராட்ட வியூகங்களை வகுத்தனர். இந்தக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் மிகத் தெளிவானவை.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை நாடாளுமன்ற விவாதங்களை ஏற்கக் கூடாது என்பதில் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஆர்.ஜே.டி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தி.மு.க, ஆம் ஆத்மி, என்.சி.பி-எஸ்.பி மற்றும் சிவசேனா-உத்தவ் அணி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் உறுதியாக நின்றன. இரு அவைகளிலும் விதி 267 கீழ் தொடர் ஒத்திவைப்பு முறைகளைப் பின்பற்றுவது, மக்கார் துவாரில் தினசரி கூட்டுப் போராட்டங்களைத் தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. பிரதமரின் துரித நீதி மன்றங்கள் அறிவிப்பு என்பது மாணவர் களின் கவனத்தைத் திசைதிருப்பும் சதி என்ப தை நாடாளுமன்றத்திலும் வீதிகளிலும் அம்பலப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது. பிரதமரின் அவசர அறிவிப்பு மாண வர்களின் கோபத்தைத் தணிப்பதற்குப் பதிலாக, போராட்டத்தை மேலும் தீவிரம் அடையச் செய்துள்ளதே நான்காம் நாள் நிலவரமாகும்.