தீக்கதிர் முக்கிய செய்திகள்
28 May 2026, 7:06 pm

நீட் முறைகேடு: ராணுவ உதவியை நாடும் மோடி அரசு

புதுதில்லி, மே 28 - நாடு முழுவதும் கடந்த மே 3 அன்றுநடந்த ‘நீட்’ தேர்வின் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த தேர்வு ரத்து செய்யப் பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து தில்லி, ஜெய்ப்பூர், குருகிராம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், நீட் தேர்வு வினாத்தாள் கசி வை தடுக்க, ராணுவப் படை களின் உதவியைக் கோர ஒன்றிய கல்வி அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21 அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, மே 28 - தமிழகத்தில் மே 31 வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து ள்ளது. கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், சேலம் உள்ளிட்ட 14 மாவட்ட ங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியிலும் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி, மே 28 - புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 27 முதல் கோடை விடுமுறை விடப் பட்டிருந்த நிலையில், ஜூன் 4 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என புதுச் சேரி முதல்வர் ரங்கசாமி அறி வித்துள்ளார். முன்னதாக, மே 31 வரை விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தமை யால் ஜூன் 1 முதல் பள்ளிகள் திறக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. தற்போது ஜூன் 4-ஆம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் ஜூன் 4 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பி டத்தக்கது.

ஏர் இந்தியா விமான சேவை இடைநிறுத்தம் நீட்டிப்பு

சென்னை, மே 28 - அமெரிக்கா - ஈரான் போரால் கடந்த இரு மாதத் திற்கும் மேலாக மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவு கிறது. அவ்வப்போது வான் வழி தாக்குதல்களும் பிரா ந்தியத்தில் நடைபெற்றதால், முன்னெச்சரிக்கை நடவடி க்கையாகவும் பயணிகள் வருகை குறைந்ததாலும், பல்வேறு நிறுவனங்களும் விமான சேவைகளை நிறுத்தின. அந்த வகையில், இந்தி யாவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவன மான ‘ஏர் இந்தியா’வும் சேவையை நிறுத்தியது. போர் தொடங்கியபோது ஏப்ரல் வரை விமான சேவை இடைநிறுத்தம் செய்யப் பட்ட நிலையில் தற்போது அது ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே மாதத் தொடக்கத்தில் ஜூன் வரை இஸ்ரேலுக்கான விமானங்களை இடை நிறுத்தம் செய்வதாக அறி வித்த ‘ஏர் இந்தியா’, போர் பதற்றம் நீடிப்பதால் தற்போது அதனை ஜூலை 31 வரை நீட்டித்துள்ளது.