நீட் வினாத்தாள் கசிவு மோடி அரசு மவுனம்
14 May 2026, 9:49 pm

நீட் வினாத்தாள் கசிவு மோடி அரசு மவுனம்

புதுதில்லி, மே 14- நீட் வினாத்தாள் கசிவின் மூலம் நாட்டின் 22 லட்சத்திற் கும் மேற்பட்ட மாணவர் களைக் கடுமையான நெருக்கடிக்குத் தள்ளிய போதிலும், ஒன்றிய பாஜக அரசு இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

நீட், ஜேஇஇ மற்றும் யுபிஎஸ்சி உள்ளிட்ட ஒன்றிய அரசால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளின் நம்பகத்தன்மையும் அழிக்கப்பட்டுள்ளது.

2024இல் நீட் வினாத்தாள் கசிந்தபோது கூட, ஒன்றிய அரசு இந்த விவகாரத்தை தீவிரமாக அணுகத் தவறி யது.

அது மீண்டும் நிகழ வழி வகுத்தது. பிரதமர் மோடி யோ, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானோ இது வரை வாய் திறக்கவில்லை.

பாஜக தலைவர்களும் மவுனம் காக்கின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளில் நாட்டில் எழுபதுக்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் கசிந்துள்ளன.

சுமார் இரண்டு கோடி மாணவர்களும் தேர்வர்களும் நெருக்கடி யில் உள்ளனர்.

முக்கிய போட்டித் தேர்வுகளின் வினா த்தாள்களைக் கசியவிடும் மாபியா கும்பல் தீவிர மாகச் செயல்பட்டு வரு கிறது.

ஒன்றிய அரசின் அறி வுறுத்தல்களின்படி எதிர்க் கட்சிகளை வேட்டையாடு வதில் தீவிரமாக இருக்கும் ஒன்றிய அமைப்புகள், இந்த வினாத்தாள் மாபியாவைக் கண்டுகொள்ளவே இல்லை.

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் நடந்த வியா பம் ஊழல், நாடு கண்டதி லேயே மிகவும் திட்டமிடப் பட்ட மற்றும் விரிவான வினாத்தாள் கசிவாகும்.

பல ஆண்டுகளாக, மத்தியப் பிர தேசத்தில் ஒரு ஒழுங்கமை க்கப்பட்ட மாபியா கும்பல் அனைத்து முக்கிய போட்டித் தேர்வுகள் மற்றும் ஆட்சேர்ப்புத் தேர்வுகளின் வினாத்தாள்களைக் கசிய விட்டது.

பாஜகவின் உயர்மட்டத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வியாபம் ஊழல் குறித்த விசாரணை எந்த முன்னேற்ற மும் அடையவில்லை.

முக்கிய சாட்சிகளில் பலர் மர்மமான சூழ்நிலைகளில் இறந்தனர்.

அதிக எண்ணி க்கையிலான வினாத்தாள் கசிவுகள் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப்பிர தேசம், ராஜஸ்தான், மத்தி யப்பிரதேசம் மற்றும் பீகாரில் நடந்துள்ளன.

தற்போதைய நீட் வினாத்தாள் கசிவும் முதலில் ராஜஸ்தானில்தான் வெளிச்சத்திற்கு வந்தது

. இந்த மாபியா கும்பல் இதன் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறது.

நீட் வினாத்தாள்கள் பல்வேறு நிலைகளில் விற்கப்பட்டன.

முதன்மை ஆதாரம் முதல் அடுக்குக்கு ரூ.5 கோடி முதல் ரூ. 10 கோடி வரையி லான தொகைக்கு வினாத்தா ள்களை வழங்கியது.

இரண்டாம் அடுக்கு அவற்றை ரூ. 40 லட்சம் வரை விற்றது.

பயிற்சி மையங்கள், விடுதி நடத்துபவர்கள் மற்றும் பிறர் இங்கு இடைத் தரகர்களாக இருந்தனர்.

கீழ் மட்டங்களுக்கான விலை ரூ.10 லட்சம் முதல் 5 லட்ச மாக இருந்தது.

தேர்வுக்கு முந்தைய நாள், டெலி கிராம் செயலி மற்றும் பிற தளங்கள் மூலம் வினாத் தாள் 25,000 முதல் 50,000 ரூபாய் வரையிலான விலை களில் விநியோகிக்கப்பட்டது.