முந்தய பக்கம்

நீட் வினாத்தாள் கசிவு முக்கிய குற்றவாளி கைது

18 May 2026, 9:19 pm
நீட் வினாத்தாள் கசிவு முக்கிய  குற்றவாளி கைது
<p><strong>நீட் வினாத்தாள் கசிவு முக்கிய குற்றவாளி கைது</strong></p><p>நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான விவ காரத்தை சிபிஐ விசாரித்து வரும் நிலை யில், மகாராஷ்டிராவின் லத்தூரில் ‘ரெணுகாய் கெமிஸ்ட்ரி கிளாசஸ்’ என்ற பயிற்சி மையத்தை நடத்தி வரும் சிவராஜ் ரகுநாத் மோடே கான்கர் என்பவரை சிபிஐ திங்களன்று கைது செய்தது. </p><p> இதுதொடர்பாக சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கை யில்,“நீட் வினாத்தா ளைக் கசியவிடுவதிலும், அதை விநியோ கிப்பதிலும் ஈடுபட்ட ஒரு திட்டமிடப்பட்ட கும்பலின் தீவிர உறுப்பினராக மோடே கான்கர் செயல்பட்டு வந்துள்ளார். ஞாயி றன்று நடத்திய சோதனையின் போது, மோ டேகான்கரின் மொபைல் போனில் கசிந்த மருத் துவ நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் கண் டெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்தே அவர் கைது செய்யப்பட்டார்.மற்ற குற்றவாளிகளு டன் சதித்திட்டம் தீட்டி, கடந்த ஏப்ரல் 23, 2026 அன்றே (தேர்வு நடப்பதற்கு முன்பு) மோடே கான்கர் நீட் தேர்வுக்கான வினாத்தாள், விடை களைப் பெற்றுள்ளார். அவ்வாறு பெற்ற வினாத் தாளை அவர் பல நபர்களுக்கு விநியோகித் துள்ளார்” என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram