முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

14 May 2026, 8:34 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

நாட்டுப்புறப் பாடகி நேஹா சிங்

நீட் வினாத்தாள் கசிவு குறித்து அரசாங்கத்தைக் கேள்வி கேட்பதாலேயே தேச விரோதியாகி விடு வோம் என்று அஞ்ச வேண்டாம். தேச நலன் கருதி, இளைஞர்களின் எதிர்காலம் சீரழிக்கப்படுவதை அனுமதிக்க வேண்டாம். ஒன்றிய பாஜக அரசாங்கத் தால் மணிப்பூரைக் காப்பாற்ற முடியவில்லை. அது உங்கள் தேர்வையா காப்பாற்றப் போகிறது?

சிவசேனா (உத்தவ்) பொதுச்செயலாளர் ஆதித்ய தாக்கரே

தவறான கொள்கைகளால் இந்தியாவின் பொருளாதார நிலை எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் துணிச்சல் பாஜகவுக்கு இருக்கிறது. அதனால் தான் தேர்தல்களின் போது தங்களது பயணங்களுக்கும், பிரச்சாரங்களுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாயைச் செலவிடுவதை ஏற்றுக்கொண்டுவிட்டு, இப்போது கட்டுப்பாடு நாடகங்களில் ஈடுபடுகிறார்கள்.

அவுட்லுக் நிறுவனர் சபீர் பாட்டியா

தங்கம் வாங்குவதை நிறுத்துங்கள். எரிபொருள் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். வீட்டிலேயே இருங்கள். ஒருவேளை தேசிய வளர்ச்சிக்கான உண்மையான வழி, வலுவான திருமண உறவுகளில் இருக்கலாம். இதுதான் முன்னேற்றமா?

ஊடகவியலாளர் அபிஷேக் பக்சி

பொதுமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மிகப்பெரிய அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வாகன அணிவகுப்புகளை நெருக்கடிக்கு மத்தியிலும் நீண்டகாலமாகப் பயன்படுத்திக் கொண்டு, இப்போது பிரதமரும் அவரது அமைச்சரவையும் சிக்கனம் குறித்துப் பேசுவது நாடகம் தான்.

Share
FacebookXWhatsAppTelegram