தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏப்ரல் மாதமே நீட் வினாத்தாள் கசிந்ததா? முறைகேட்டை மூடி மறைத்த தில்லி பாஜக அரசு?

15 May 2026, 11:22 pm
ஏப்ரல் மாதமே நீட் வினாத்தாள் கசிந்ததா? முறைகேட்டை மூடி மறைத்த தில்லி பாஜக அரசு?

ஏப்ரல் மாதமே நீட் வினாத்தாள் கசிந்ததா? முறைகேட்டை மூடி மறைத்த தில்லி பாஜக அரசு?

புதுதில்லி நாடு முழுவதும் மே 3 அன்று இளங்கலை மருத்துவப் படிப்பு க்கான நீட் தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வு நடைபெற்று ஒரு வாரத்திற்குப் பிறகு ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்தது கண்டறியப்பட்ட சூழலில், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் மட்டு மின்றி நாடு முழுவதும் பாஜகவினர் மூலம் நீட் வினாத்தாள் விற்பனை செய்யப் பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட வர்களில் பெரும்பாலானோர் பாஜகவினரே ஆவர்.

ஏப்ரல் இந்நிலையில், தில்லியில் ஏப்ரல் மாதமே நீட் வினாத்தாள் கசிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தெற்கு தில்லி யின் மஹிபால்பூரில் நீட் தொடர்பான மோசடியை காவல்துறை விசாரித்துக் கொண்டிருந்தது.

மே 2 அன்று விசாரணை யின் போது குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வினோத் பாய் படேல் என்ற தரகர் நீட் வினாத்தாள் அளித்து, சிறந்த மருத்து வக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் பெற்றுத் தருவதாக, தனது நண்பர்களு டன் மஹிபால்பூர் ஹோட்டலில் தங்கி யிருந்ததை தில்லி காவல்துறையினர் கண்டறிந்தனர்.

காவல்துறை விசாரணையில், வினோத் பாய் படேல் அவரது நண்பர்கள் - உறவினர்கள் வட்டத்தில் உள்ள சில மாணவர்களிடம், நீட் வினாத்தாள் கொடுத்துள்ளார்.

குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த 3 மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அணுகி எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாகப் பொய் வாக்குறுதி அளித்துள்ளார்.

மாணவர்கள் அட்மிஷன் பெற்ற பிறகு 25 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று அவர் கேட்டுள்ளார்

. முன்பணமாகச் சில தொகைகளையும் வசூலித்துள்ளார். 3 மாணவர்களும் தில்லிக்கு வரவழைக்கப்பட்டு, காஜியாபாத்தில் உள்ள ஒரு சாதாரண ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மழுப்பும் தில்லி காவல்துறை தில்லி காவல்துறையினர் மேற் கொண்ட விசாரணை மே 2 அன்று, அதா வது நீட் தேர்வு நடைபெறும் ஒருநாளுக்கு முன்னதாக நிறைவடைந்தது.

விசாரணை யின் போது நீட் வினாத்தாள் கைப்பற்றப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. ஆ

னால் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தில்லி காவல்துறை இந்த விவகாரத்தை மூடி மறைத்துள்ளது.

இந்த விஷயம் தற்போது வெளியில் கசிய தில்லி காவல்துறை மழுப்பலாக விளக்கம் அளித்துள்ளது.

அதில்,” ‘நீட் கேள்விகள்’ உண்மையான வினாத்தாளில் இருந்து எடுக்கப்பட்டவை அல்ல.

அவை மற்ற பயிற்சி நிறுவனங்கள் வழங்கிய பல பயிற்சித் தாள்களின் தொகுப்பு மட்டுமே.

மாணவர்கள் இந்தக் கேள்விகளைப் பயிற்சி செய்து தேர்வெழுதினால், அவர்களில் யாராவது தேர்ச்சி பெற்றால், படேல் தனது கமிஷன் தொகையைக் கோருவார் என்பதுதான் இந்த மோசடித் திட்டம்” என மழுப்பலாகக் கூறியுள்ளது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.

ஏப்ரல் மாதமே நீட் வினாத்தாள் கசிந்ததை தில்லி காவல்துறை மூலம் அம்மாநில பாஜக அரசு மூடி மறைத்ததா? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.