நீட் குளறுபடிக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக கோரி கடலூரில் மாணவர்கள் உண்ணாநிலை
11 Jul 2026, 10:27 pm
<p><strong>நீட் குளறுபடிக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக கோரி கடலூரில் மாணவர்கள் உண்ணாநிலை</strong></p><p>கடலூர், ஜூலை 11- நீட் தேர்வில் தொடர்ந்து அரங்கேறி வரும் வினாத்தாள் கசிவு, நிர்வாக ரீதியி லான குளறுபடிகள் மற்றும் இதனால் ஏற்படும் மாணவர்களின் தற்கொலைகள் உள்ளிட்ட தொடர் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று, ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடி யாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் கடலூரில் ஒரு நாள் உண்ணா நிலைப் போராட்டம் சனிக்கிழமை நடை பெற்றது. நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கப் பட்ட இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த மாண வர்கள் திரளாகப் பங்கேற்றனர். போராட்டத்திற்கு, இந்திய மாணவர் சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் சௌமியா தலைமை தாங்கினார். குடி யிருப்போர் நலச்சங்கத்தின் சிறப்புத் தலைவர் எம். மருதவாணன் இந்தப் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். தொடர்ந்து நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஜீவானந்தம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் அவினாஷ் ஆகியோர் நீட் தேர்வினால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்துக் கடுமையாக விமர்சித்துப் பேசினர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தமிழ்நாடு உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். நீட் தேர்வில் ஆண்டுதோறும் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும், மாணவர்களின் உயிரிழப்புகளுக்கு ஒன்றிய அரசு பதில் சொல்ல வேண்டும் மற்றும் நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் இப்போராட்டத்தின் வாயிலாக உரக்க முழங்கினர். நிறைவில், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் துணைச் செயலாளர் செங்கதிர் நன்றி கூறினர்.</p>
