நீட் மறுதேர்வு - தமிழ்நாட்டில் மேலும் ஒரு மாணவி தற்கொலை!
19 Jun 2026, 6:00 pm

நீட் மறுதேர்வு காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த கோபிகா என்ற மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த சேகர்-புவனேஸ்வரி தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். சேகர் முடி திருத்தும் தொழில் செய்து வருகிறார். அவரது முதல் மகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகள் கோபிகா 12ஆம் வகுப்பு தேர்வு முடித்துவிட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி வந்துள்ளார். இரண்டு முறை தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் நாளை மறுதினம் நீட் மறுதேர்வு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மன அழுத்தம் காரணமாக சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள சின்னப்பம்பட்டியில் உள்ள பாட்டி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவியின் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நீட் மறுதேர்வால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக கடந்த 17-ஆம் தேதி கோவையை சேர்ந்த அணு கீர்த்தனா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.