நீட் தேர்விற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறை
yesterday

நீட் தேர்விற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது அடக்குமுறை

வாலிபர், மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் தருமபுரி, ஜூன் 22- நீட் தேர்விற்கு எதிராக போராட் டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல் துறையினர் மேற்கொண்ட அடக்குமுறையை கண்டித்து வாலி பர், மாணவர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இளநிலை மருத்துவப்படிப்பிற் காக நாடு முழுவதும் நடத்தப் படும் நீட் தேர்வால், மாணவர்கள் தங்களுடைய உயிரை இழந்து வரு கின்றனர்.

இதனால் இத்தேர்வை ரத்து செய்ய வேண்டும். இத்தேர் வில் நடைபெறும் முறைகேடுக ளுக்கு பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிர தான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங் கத்தினர் நாடு முழுவதும் தொடர் போராட்டங்களை நடத்தி வரு கின்றனர்.

இதன் ஒருபகுதியாக சென்னையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்ட மாண வர்கள் மீது காவல் துறையினர் கடும் அடக்குமுறையை ஏவி, குண்டுக்கட்டாக கைது செய்துள்ள னர். இதனை கண்டித்து ஞாயி றன்று இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர் சங்க மாவட்டச் செயலா ளர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.

இதில் வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் பி.கோவிந்தசாமி, மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் டார் வின், மாவட்ட நிர்வாகிகள் ரவி, சினேகா, குப்பன், கார்த்திகேயன், அருள்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை கோவை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர் சங்க மாவட்டத் தலை வர் பாவெல் தலைமை வகித்தார். இதில் வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் தினேஷ் ராஜா, நிர்வாகிகள் முத்துமுருகன், குருசாரதி, நிசார் அகமது, ஸ்ரீதர், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஜுல்பிகர் அகமது, நிர்வாகிகள் பிரசாந்த், பிஸ் மில்லா கான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.