நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: ஒன்றிய அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு
23 Jul 2026, 10:30 pm
<p><strong>நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: ஒன்றிய அமைச்சரின் உருவபொம்மை எரிப்பு</strong></p><p>கும்பகோணம், ஜூலை 23- நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலகக்கோரி யும் தில்லியில் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 48 மணி நேரக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. கும்பகோணம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி யில், இந்திய மாணவர் சங்கம் சார்பில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கிளைத் தலைவர் ஜான் அபிஷேக் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்டச் செயலாளர் ஹரிஷ், செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரன், மாநகரத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கிளைச் செயலாளர் சரவணன் நன்றி தெரிவித்தார். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர் சங்கம் தலைமையில் வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் பேராசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் சேவியர்.செல்வக்குமார் உரையாற்றினார்.</p>
