தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து வாலிபர், மாணவர் சங்கங்கள்் ஆர்ப்பாட்டம்

19 May 2026, 10:19 pm
நீட் தேர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து  வாலிபர், மாணவர் சங்கங்கள்் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து வாலிபர், மாணவர் சங்கங்கள்் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், மே 19- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய வற்றின் சார்பில், நீட் தேர்வை சரியாக நடத்த தெரியாத அகில இந்திய தேர்வு முகமையை கலைத்திட கோரியும், 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்திட வலியுறுத்தியும், பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்தும் நாகப்பட்டினம் அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அருள்தாஸ் தலைமை தாங்கினார்

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் சந்திரமோகன், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோதிபாசு, மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முகேஷ், வாலிபர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் பிரகாஷ், மாவட்ட துணைச் செயலாளர் மதியழகன், மாவட்ட துணைத் தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகில், இடதுசாரி மாணவர் மற்றும் வாலிபர் அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.அருளரசன் தலைமை வகித்தார்.

வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் அர்ஜுன், அகில இந்திய இளைஞர் பெருமன்றம் மாவட்டத் தலைவர் காரல் மார்க்ஸ், இளைஞர் பெருமன்றம் மாவட்ட செயலாளர் பாரதி, நகரத் தலைவர் காதர், இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் தர்ஷினி, வாலிபர் சங்க நகரத் தலைவர் நாகராஜ் மற்றும் நகரக் குழு உறுப்பினர்கள் வினோத்குமார், ஸ்ரீதர், பூபதி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட தலைமை தபால் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சா. ஜனார்த்தனன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் எம். விஜய், அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் எஸ். கார்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.

வாலிபர் சங்க நகரச் செயலாளர் ஆர். தீபக், இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைச் செயலாளர் கே. பாலசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகளை விளக்கி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ. மகாதீர், இளைஞர் பெரு மன்றத்தின் மாவட்டச் செயலாளர் டி. மாரிமுத்து, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். வசந்தகுமார் ஆகியோர் உரையாற்றினர்.

திருவாரூர் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டகுழு சார்பாக, திருவாரூர் ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர்கள் பா.ஆனந்த், ஜெ.பாரதசெல்வன், எஸ்.பாலமுருகன், ப.விக்னேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் ஜி. சரவணன், அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் ஜெ.பி. வீரபாண்டியன், வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எம். பாலா ஆகியோர் உரையாற்றினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.