முந்தய பக்கம்

நீட் தேர்வு தேர்ச்சி கடந்த ஆண்டுகளைவிட குறைவு

18 Jul 2026, 9:39 pm
நீட் தேர்வு தேர்ச்சி கடந்த ஆண்டுகளைவிட குறைவு
<p><strong>நீட் தேர்வு தேர்ச்சி கடந்த ஆண்டுகளைவிட குறைவு</strong></p><p>​​​​​​​சென்னை, ஜூலை 18 - நாடு முழுவதும் தேர்ச்சி எண்ணிக்கை குறைந்தது போலவே, தமிழ்நாட்டிலும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண் ணிக்கை நடப்பாண்டில் சரிந்துள்ளது. ‘நீட்’ மறுதேர்வு முடிவு வெள்ளியன்று வெளியானது. வழக்கமாகத் தேர்வு எழுதி யவர்களின் புள்ளி விவரங்களைத் தெளி வாகக் குறிப்பிட்டு வெளியிடும் தேசிய தேர்வு முகமை, இந்த முறை சுமார் என்ற அடிப்ப டையிலேயே தகவல்களைத் தெரிவித் துள்ளது. நடப்பாண்டில் நீட் மறுதேர்வை எழுதிய சுமார் 20 லட்சம் பேரில், 11.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடு கையில் குறைவானதாகும். 2023 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வை எழுதும் மாணவ-மாணவியரின் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்திருக்கிறது; நடப் பாண்டிலும் அதே எண்ணிக்கையினர் எழுதி யிருந்தும், தேர்ச்சி பெற்றவர்களின் எண் ணிக்கை மட்டும் வெகுவாகக் குறைந்திருக் கிறது. தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 1,08,601 பேர் தேர்வு எழுதியதில் 61,306 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்; 2022 ஆம் ஆண்டு முதலான புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடும் போது, தேர்வு எழுதியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை சரிந்திருக் கிறது. இந்த ஆண்டு நீட் மறுதேர்வு வினாத் தாள் சற்று கடினமாகவும், தேர்வு தொடர் பான நிச்சயமற்றதன்மை, தொடர் குழப்பங் கள் மற்றும் குறைந்த கால அவகாசம் ஆகியவை மாணவர்களை பாதித்ததாகவும் கருத்து நிலவுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram