720இல் 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கசிந்துள்ளன நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்
14 May 2026, 8:38 pm

720இல் 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கசிந்துள்ளன நீட் தேர்வு வினாத்தாள் கசிவிற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம்

புதுதில்லி நடப்பாண்டு நீட் தேர்வில் 720 மதிப்பெண்களில் 600 மதிப்பெண்களுக்கான கேள்விகள் கசிந்துள்ளன என ஆதாரங்களை வெளியிட்டு இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எஸ்எப்ஐ தலைவர் ஆதர்ஷ் எம்.சாஜி, பொதுச்செய லாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா வெளி யிட்டுள்ள அறிக்கையில், “தொ டக்கத்திலிருந்தே தேர்வுகளை நடத்துவதில் நிர்வாகத் திறமை யின்றி செயல்படுவதாகப் பெயர் பெற்ற நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை, தற்போது மீண்டும் ஒருமுறை வினாத்தாள் கசிவு மூலம் தனது இயலாமை யை நிரூபித்துள்ளது. வினாத்தாள் கசிவு நீட் தேர்வின் நம்பகத் தன்மையை கடுமையாக பாதித் துள்ளது. தேர்வில் கேட்கப்படும் 180 கேள்விகளில் சுமார் 15 கேள்வி கள் முன்கூட்டியே வெளியாகி யுள்ளன. குறிப்பாக வேதியியல் பகுதியில் இருந்து சுமார் 120 மதிப் பெண்கள் கொண்ட கேள்விகள் அப்படியே கசிந்துள்ளன.

மோடி அரசே காரணம்

பல்வேறு தரநிலைகள், தேவை களைப் புறக்கணித்து, தேர்வு முறையை மையப்படுத்த மோடி அரசு எடுத்த நடவடிக்கைகளே இந்த முறைகேடுகளுக்குக் கார ணம் ஆகும். தேர்வுகளை மையப் படுத்துவது பெரிய அளவிலான ஊழல்கள், முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் என்று இந்திய மாண வர் சங்கம் உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் ஆரம்பத்திலிருந்தே எச்சரித்து வந்தன. ஒன்றிய அரசின் இத்தகைய தவறான நிர்வாகத் தால் நாடு முழுவதும் ‘தேர்வு மாபி யாக்கள்’ உருவாகியுள்ளனர். இது நடுத்தர வர்க்க மாணவர்களைச் சுரண்டும் நுழைவுத்தேர்வு பயிற்சி மையங்களின் ஆதிக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது. கோரிக்கைகள் 1. வினாத்தாள் கசிவு குறித்து முறை யான விசாரணை நடத்தப்பட வேண்டும். 2. தேசிய தேர்வு முகமையின் தவ றான நிர்வாகத்தால் மாணவர்க ளுக்கு ஏற்பட்டுள்ள பொரு ளாதார இழப்பு, மனஉளைச்சலு க்குத் தகுந்த இழப்பீடு வழங் கப்பட வேண்டும். 3. ஒன்றிய அரசு தனது அறி வியலற்ற, திறமையற்ற தேர்வு முறையைக் கைவிட்டு, தேசிய தேர்வு முகமையை உடனடி யாக கலைக்க வேண்டும் மேற்கண்டவாறு தனது அறிக்கையில் இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.