முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

12 May 2026, 8:43 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் ராமன் பல்லா

பணம் கறக்கும் இயந்திரமாகவும், மிகப்பெரிய ஊழலாகவும் நீட் தேர்வு மாறிவிட்டது. பாஜக ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் வினாத்தாள் கசிவுகளுக்குப் பின்னால் இருக்கும் ஆழமான கூட்டுச் சதியை உச்சநீதிமன்றம் தான் அம்பலப்படுத்த வேண்டும்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத்

வினாத்தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 23 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் மீண்டும் ஒருமுறை விளையாட்டாக மாற்றப்பட்டுள்ளது. பீகாரிலும், நாடு முழுவதிலும் தொடரும் இந்த வினாத்தாள் கசிவுச் சங்கிலி முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.

தேசியவாத காங்கிரஸ் (சரத்) எம்எல்ஏ ரோஹித்

நீட் வினாத்தாள் கசிவு வழக்கின் பின்னணி நாசிக் வரை நீண்டுள்ளதால், மகாராஷ்டிரா மிகப்பெரிய அவமானத்தை எதிர்கொள்கிறது. இந்த நீட் ஊழலால் நாடு முழுவதும் 24 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 2.25 லட்சம் மாணவர்களும் அடங்குவர்.

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால்

ஒவ்வொரு முறையும் நீட் தேர்வு தொடர்பாக கலக்கமான நிகழ்வுகள் அரங்கேறுகிறது. இம்முறை நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் பெருமளவில் வீதியில் இறங்கி போராட வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு போராட்டங்களின் மொழி மட்டுமே புரியும் என்ற சூழல் உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram