தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வு குளறுபடியால் கருகிய மருத்துவக் கனவு கோவையில் 19 வயது மாணவி தற்கொலை!

17 Jun 2026, 9:12 pm
நீட் தேர்வு குளறுபடியால் கருகிய மருத்துவக் கனவு  கோவையில் 19 வயது மாணவி தற்கொலை!

நீட் தேர்வு குளறுபடியால் கருகிய மருத்துவக் கனவு கோவையில் 19 வயது மாணவி தற்கொலை!

கோயம்புத்தூர், ஜூன் 17 – மருத்துவக் கனவைச் சுமந்து, நீட் தேர்வின் தொடர் குளறுபடிகளால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான 19 வயது இளம் மாணவி அனு கீர்த்தனா கோவையில் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தையும், நீட் எதிர்ப்பு அலையையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவைப்புதூரைச் சேர்ந்த சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளரும், சிபிஎம் மேற்கு நகரக்குழு உறுப்பினருமான செந்தில் பிரபுவின் மகள் அனு கீர்த்தனா (19). சிறு வயது முதலே மருத்துவராகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து வந்தவர். இதற்கு முன் எழுதிய நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, இவருக்கு பி.டி.எஸ் (பல் மருத்துவம்) படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தது. எனினும், எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு மீண்டும் தீவிரமாகப் படித்தார்.

கடந்த மே 3 அன்று இவர் எழுதிய நீட் தேர்வை, வடமாநிலங்களில் நடந்த வினாத்தாள் கசிவு மற்றும் மோசடியால் ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்தது. மீண்டும் ஜூன் 21 அன்று மறுதேர்வு என அறிவிக்கப்பட்டதால், அனு கீர்த்தனா கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தனது சித்தப்பாவின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு “என்னால் எதிர்பார்த்த அளவு தயாராக முடியவில்லை... கடுமை யான மன அழுத்தத்தில் இருக்கிறேன், என்னால் இயலவில்லை” என உருக்க மாகக் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, அதிகளவு வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதுதொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அரசின் கொள்கை வடிவக் கொலை: சிபிஎம்

இதுகுறித்து சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் கூறுகை யில், “ஒன்றிய மோடி அரசின் திறமை யின்மையால் 21 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கருகியுள்ளது. நீட் என்பது தகுதிக்கானது அல்ல; அது ரூ. 60 ஆயிரம் கோடி தனியார் பயிற்சி மையங்களின் கொள்ளைக் களம். உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

இதனிடையே, கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன், சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. “இது தற்கொலையல்ல, ஆட்சியாளர்களின் தவ றான கொள்கையால் நடந்த கொலை; ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை உடலை வாங்க மாட்டோம்” என உறவினர்களும் தோழர்களும் கண்ணீரு டன் முழக்கமிட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.