தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் குளறுபடி: செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் டி.சுந்தரராமன்

24 Jun 2026, 9:26 pm
நீட் குளறுபடி:  செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் டி.சுந்தரராமன்

நீட் குளறுபடி: செய்ய வேண்டியது என்ன? - டாக்டர் டி.சுந்தரராமன்

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு தொடர்பான விவாதங்கள் நாடு முழுவதும் கொழுந்து விட்டு எரிகின்றன. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இப்பிரச்சனையில், தற்போது முன்வைக்கப்படும் மேலோட்டமான கருத்துக்கள் எதார்த்தமான தீர்வாக அமையப் போவ தில்லை. ஏனென்றால், மாணவர்களின் தகுதியை ஒரே ஒரு தேசியத் தேர்வின் மூலம் கண்டறிவது நடைமுறை யில் சாத்தியமற்றது. மக்களின் சுகாதாரத் தேவைக ளை நிறைவேற்றும் வகையிலும், தகுதியான மருத்துவ நிபுணர்களை உருவாக்கும் வகையிலும், மருத்துவக் கல்விக்கான சேர்க்கை மற்றும் தேர்வு முறைகளில் மாற்று வழிகள் குறித்து நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தேர்வுக் குளறுபடிகளும் மாணவர்களின் துயரமும்

தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மற்றும் தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ) போன்ற அமைப்புகள் தாங்கள் செய்த அதிகார துஷ்பிரயோ கங்களுக்காகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டு, மே 3 அன்று நடைபெற்ற இத்தேர்வில் சுமார் 22.6 லட்சம் மாணவர்கள் 550-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வெழுதினர். வினாத்தாள் கசிவு காரணமாகத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் தேர்வு எழுத வேண்டிய மன அழுத்தத்திற்கு மாண வர்கள் ஆளாகினர். இதனால் மாணவர்கள், குடும்பத்தி னரின் உழைப்பு, பணம் மற்றும் நேரம் வீணடிக்கப்பட் டுள்ளன. நீட் தேர்வால் ஏற்படும் மன அழுத்தம் இளம் தலைமுறையினரின் தற்கொலைகளுக்கு வழி வகுப்பது ஒரு தொடர்கதையாகிவிட்டது.

உச்சநீதிமன்றம், நாடாளுமன்ற நிலைக்குழு, மாநில அரசுகள் மற்றும் மாணவர் சங்கங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர். வினாத்தாள் கசிவு என்பது சில அதிகாரிகள் மற்றும் ஊழல்வாதிகளால் மட்டுமே நிகழ்கிறது என்ற மேலோட்டமான கருத்தை மத்திய கல்வி அமைச்சர் உள்ளிட்ட பலர் முன்வைக்கின்ற னர். இச்சிக்கலைச் சரிசெய்யத் தேர்வுகளை முழு மையாகக் கணினிமயமாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் வினாத்தாள் கசிவைத் தடுத்துவிடலாம் என்றும் வாதிடுகின்றனர். ஆனால், கடந்த காலங்க ளில் என்.டி.ஏ நடத்திய பல கணினி வழித் தேர்வுகளி லும் முறைகேடுகள் தொடர்ந்துள்ளன என்பதே எதார்த்தம்.

என்.டி.ஏ அமைப்பின் பலவீனமும் கணினிமயமாக்கல் மாயையும்

தற்போது உருவாக்கப்பட்டுள்ள என்.டி.ஏ அமைப்பு நேர்மையையோ அல்லது திறனையோ மையமாகக் கொண்டு கட்டமைக்கப்படவில்லை. இது வெறும் சங்கமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு தற்காலிக அமைப்பாகும்; இதன் பெரும்பாலான ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையிலேயே பணிபுரிகின்றனர். மேலும், என்.டி.ஏ தனது முக்கியப் பணிகளை வெளி நிறுவனங்களிடம் காண்ட்ராக்ட் அடிப்படையில் ஒப்படைத்துள்ளது. நீட் தேர்வு மட்டுமன்றி, சுமார் ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் எட்டு தேசிய அளவிலான தேர்வுகளையும் இந்தத் தற்காலிக அமைப்பே நடத்துகிறது.

நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் உருவாக் கப்பட்டு, பொதுச் சேவையை வழங்கும் ஒரு வலுவான பொது நிறுவனமாக என்.டி.ஏ-வை மாற்றியமைக்க வேண்டும் என்று ‘அகில இந்திய மக்கள் அறிவியல் அமைப்பு’ வலியுறுத்தியுள்ளது. கணினிமயமாக்கல் இப் பிரச்சனைக்குத் தீர்வாகாது; மாறாக, அது சமூக மற்றும் புவியியல் ரீதியாக நிலவும் பெரும் டிஜிட்டல் இடைவெளியை அதிகரித்து, பின்தங்கிய மாணவர்க ளின் கல்வி உரிமையைப் பாதிக்கும். தேர்வுகள் பல தொகுதிகளாக நடத்தப்பட வேண்டியிருப்பதால், வினாத்தாள்களுக்கு இடையே கணினி வழி தரப் படுத்தலை மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். இது வெளிப்படைத்தன்மையைக் குறைத்து, சிக்கல்க ளை மேலும் தீவிரமாக்கும். இதற்குச் சிறந்த உதார ணம், சி.பி.எஸ்.இ தேர்வுகளைக் கணினிமயமாக்குவ தில் ஏற்பட்டுள்ள தொடர் குளறுபடிகளாகும்.

நீட் வினாத்தாள் கசிவு என்பது தற்செயலான நிகழ் வல்ல. வினாத்தாள்கள் ரூ. 10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை விற்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. என்.டி.ஏ-வின் வினாத்தாள் தயாரிப்பா ளர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயல்படும், லாப நோக்கம் கொண்ட தனியார் பயிற்சி மையங்களின் வலைப்பின்னலே இதற்கு முதன்மைக் காரணம்

கேலிக்கூத்தாகும் ‘தகுதி’ முழக்கமும் வணிகமயமாக்கலும்

“ஒரே நாடு, ஒரே தேர்வு” முறையில் திறமை என்பது வெறும் எண் மதிப்பாகச் சுருக்கப்படுகிறது. பல-தேர்வு வினா முறையிலான இத்தேர்வு, அறிவைச் சிதறடித்து, எவ்வித புரிதலுமின்றி வெறும் மனப்பாடம் செய்யும் முறையையே ஊக்குவிக்கிறது.

உண்மையில், மருத்துவக் கல்லூரி இடங்களுள் ஏறக்குறைய பாதி இடங்களைத் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிற்கு வழங்குவது அரசின் தகுதி முழக்கத்தைக் கேலிக்கூத்தாக்குகிறது. அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற ஒரு மாணவர் 800-க்கு 600-க்கும் அதிகமான மதிப்பெண் களைப் பெற வேண்டிய சூழலில், நிர்வாக ஒதுக்கீட்டு இடத்திற்கு 150 முதல் 300 மதிப்பெண்கள் இருந்தாலே போதுமானது. இந்த இடங்கள் அதிகத் தொகை தரு பவர்களுக்குக் கல்விச் சந்தையில் விற்கப்படுகின்றன.

நீட் முதுகலைத் தேர்வு முறையோ, இந்தத் தகுதி நா டகத்தை உச்சக்கட்ட அபத்தத்திற்கு ஆளாக்குகிறது. தனியார் கல்லூரிகளில் முதுகலை படிக்க ஒரு இடத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இத்தொகையைச் செலுத்தக் கூடிய பணக்கார மாணவர்களைக் கண்டறிய, தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம் அல்லது ஒற்றை இலக்க மதிப்பெண் என்ற அளவிற்குக் குறைக்கப்படுகிறது. இதன் விளைவாக, தேர்வில் ஒரு கேள்விக்குக் கூடச் சரியாகப் பதிலளிக்காத மாணவர் கூடப் பணம் இருந்தால் மருத்துவம் படிக்க முடியும் என்ற சூழல் உரு வாகியுள்ளது.

தெளிவாகச் சொல்வதானால், நீட் தேர்வு முறை என்பது மாணவர்களின் தகுதி மீதான கவலையுமின்றி, தனியார் மருத்துவக் கல்வித் துறைக்கும், பயிற்சி மையங்களுக்கும் அதீத லாபத்தை ஈட்டித் தரும் ஒரு வணிகக் கட்டமைப்பாகவே செயல்படுகிறது. இது சி.பி.எஸ்.இ அல்லாத கல்வி முறைகளில் படிக்கும் கிராமப்புற மற்றும் பின்தங்கிய சமூக மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் தடைக்கல்லாக மாறியுள்ளது.

பள்ளிப் படிப்பின் மீதான தாக்குதலும் சமூக விலையும்

ஒட்டுமொத்த நீட் தேர்வர்களில் சுமார் 58,000 மாணவர்கள் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிகளி லும், 69,000 மாணவர்கள் பெரும் தொகையைச் செலுத்தித் தனியார் கல்லூரிகளிலும் சேர முடியும். மீதமுள்ள 95 சதவீத மாணவர்கள் தோல்வி மனப்பான் மையுடன் எஞ்சுகின்றனர். பாடக் கருத்துகளை ஆழமா கப் புரிந்துகொள்ள வேண்டிய பள்ளிப் பருவத்தின் மிகச் சிறந்த ஆண்டுகளை, வெறும் பல-தேர்வு வினாக்க ளுக்கு விடையளிக்கும் பயிற்சிக்காகவே மாணவர்கள் வீணடிக்கின்றனர்.

வழக்கமான பள்ளி நேரத்தைத் தாண்டிப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பக் கட்டாயப்படுத்தப்படுகி றார்கள். இந்தச் சமமற்ற போட்டியால், அதிக கட்ட ணம் வசூலிக்கும் போட்டித் தேர்வுப் பயிற்சி மையங் கள் நாடு முழுவதும் பல்கிப் பெருகி, ஒட்டுமொத்த கல்வித் துறையையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கியுள்ளன. மாண வர்களை அறிவு சார்ந்து மாற்ற வேண்டிய ஆசிரியர் கள், வெறும் தேர்வுக்கான தயாரிப்புப் பணிகளைச் செய்யும் கருவிகளாக மாற்றப்பட்டுத் தங்களின் தொ ழில்முறை சுதந்திரத்தை இழந்துள்ளனர். நீட் தேர்வு முறை என்பது சமூகத்தில் ஒரு சிலர் மட்டுமே உயர் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக, ஏனைய ஒட்டு மொத்த சமூகமும் செலுத்துகிற மிகக் கடுமையான விலையாகும்.

மாற்றுக்கான தீர்வுகள் என்ன?

பல்வேறு புவியியல் பகுதிகள் மற்றும் மக்களின் சுகாதாரத் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யக் கூடிய தகுதியான பொதுச் சுகாதாரப் பணியாளர்களை உருவாக்குவதே மருத்துவக் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். ஒரு சிறந்த மருத்துவரை உரு வாக்குவதில் நுழைவுத்தேர்வு மதிப்பெண் மட்டுமே தீர்மானிக்கும் சக்தி அல்ல; சேவை பெறும் சமூகத்துடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளும் மனப்பான்மையே மிக முக்கியமானது. இதனைத் தேர்வு முறைகளால் அளவிட முடியாது.

இதற்கான மாற்றுத் தீர்வுகள்:

H மாநிலங்களிடம் ஒப்படைத்தல்: நீட் தேர்வின் விதிமுறை களைத் தளர்த்தி, ஒன்றிய அரசு நிறுவனங்கள் மற்றும் மாநில மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களில் ஒரு சிறிய பகுதிக்கு (சுமார் 15% அகில இந்திய ஒதுக்கீடு) மட்டும் நுழைவுத் தேர்வாக இதனை மாற்றலாம்.

H மாநில சுயாட்சி: மீதமுள்ள 85 சதவீத இடங்களுக் கான மாணவர் சேர்க்கை முடிவை அந்தந்த மாநில அரசுகளிடமே முழுமையாக ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், மாநில அரசுகள் தங்கள் சுகாதாரத் துறைத் தேவைகளுக்கு ஏற்ப, பின்தங்கிய சமூக-பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட மாண வர்களுக்குச் சமமான வாய்ப்புகளை வழங்கும் வெளிப்படையான சேர்க்கை நடைமுறைகளை உருவாக்க முடியும்.

H பொது ஒழுங்குமுறை அமைப்பு: சுகாதாரக் கல்விக் கான வலுவான தரக் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும். சிறப்புப் பங்கேற்புத்தன்மை கொண்ட இத்தகைய பொது ஒழுங்குமுறை அமைப்பு கள் மருத்துவ நிபுணர்களால் கண்காணிக்கப்பட வேண்டும்.

H வெளியேற்றத் தேர்வு: தேவைப்பட்டால் அடிப்படைத் தரநிலைகளை உறுதிப்படுத்த, பல்கலைக்கழக ங்கள் நடத்தும் ‘வெளியேற்றத் தேர்வு’ ஒன்றினை இறுதி கட்டத்தில் பயன்படுத்தலாம்.

வினாத்தாள் கசிவு ஏதுமின்றி நடத்தப்பட்டாலுமே கூட, பொது அறிவு தெரிவு வினாக்கள் அடிப்படையி லான தேசிய அளவிலான தரப்படுத்தப்பட்ட தேர்வுகள் மருத்துவக் கல்விக்கு ஒருபோதும் சரியான மாற்றாக அமையாது.

டாக்டர் டி.சுந்தர்ராமன் எழுதிய “தி நீட் ஃபியாஸ்கோ : பியாண்ட் தி ஆப்வியஸ்” கட்டுரையின் தமிழ் சுருக்கம்: கே.ஆர்.ரவிச்சந்திரன், (நன்றி: எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி – 13 ஜூன் 2026 )

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.