தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாணவர்களின் கனவுகளோடு விளையாடும் ஒன்றிய அரசு! நீட் தேர்வு குளறுபடிகள்: - கொந்தளிக்கும் மக்கள் குரல்

17 May 2026, 12:52 am
மாணவர்களின் கனவுகளோடு விளையாடும் ஒன்றிய அரசு! நீட் தேர்வு குளறுபடிகள்: - கொந்தளிக்கும் மக்கள் குரல்

மாணவர்களின் கனவுகளோடு விளையாடும் ஒன்றிய அரசு! நீட் தேர்வு குளறுபடிகள்: - கொந்தளிக்கும் மக்கள் குரல்

மருத்துவக் கனவுகளுடன் பல ஆண்டுகள் உழைத்த மாண வர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது நீட் தேர்வு ரத்து மற் றும் மறுதேர்வு குறித்த அறிவிப்பு கள். ‘

தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு’ (NEET) என்பது தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுக்க உரு வாக்கப்பட்ட ஒரு உயர்தரமான அமைப்பு என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட ஒன்றிய அரசின் முகத்திரை, கேள்வித்தாள் கசிவு மற்றும் தொடர் முறைகேடுகளால் இன்று கிழிந்து தொங்குகிறது.

லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து, தூக்கத்தை தொலைத்து பயிற்சி மையங்களில் தவம் கிடந்த மாணவர்களின் உழைப்பு, ஒரு சில ரின் முறைகேட்டால் வீணாகிப் போயுள்ளது.

இந்தத் தேர்வு முறை கேடுகள் குறித்து நமது செய்தியாளர் கள் பல்வேறு தரப்பு மக்களிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் வெளிப்படுத்திய ஆதங்கத்தின் தொகுப்பு இது – உழைப்பை உதாசீனப்படுத்தும் நடைமுறைகள் - இளங்கோ நீட் தேர்வு எழுதச் செல்லும் மாண வர்களை சோதனை செய்யும் வீடியோக்களை பார்க்கும்போது நமக்கே பதற்றமாக இருக்கிறது.

பட் டன்களில் கூட கேமரா இருக்கிறதா என்று பார்க்கும் அளவுக்கு கெடுபிடி காட்டும் தேசியத் தேர்வு முகமை (NTA), வினாத்தாள் கசிவை தடுக்கத் தவறியது ஏன்? வினாத்தாள் கசிந்தவுடன் தேர்வை ரத்து செய்து விடுகிறார்கள், ஆனால் அந்த மாண வர்களின் பல ஆண்டுகால உழைப்பை பற்றி யாருக்கும் கவலையில்லை.

பாதுகாப்பான அமைப்பு என்று சொல்லிக்கொள் ளும் NTA-வின் தரம் இவ்வளவு மோச மாக இருப்பது கண்டிக்கத்தக்கது.

கூடுதல் பாதுகாப்பு அவசியம் - ஆனந்தகுமார் நீட் ரத்து செய்யப்பட்டுள்ளது மிகுந்த வருத்தத்தை தருகிறது.

பள்ளி பாடத்திட்டத்தைத் தாண்டி மாணவர்கள் இதற்காக தனிப் பயிற்சி எடுத்துத் தயாராகிறார்கள்.

முறைகேடுகள் நடந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டுமே தவிர, மொத்த தேர்வையும் ரத்து செய்வது மாணவர்களின் மன நிலையை சிதைத்துவிடும். வினாத் தாள் பாதுகாப்பில் கூடுதல் முன்னெச் சரிக்கை எடுத்திருக்க வேண்டும். மாணவர்களின் நேரம் வீணாகாமல் நியாயமான முடிவை அரசு எடுக்க வேண்டும்.

அதிர்ச்சியில் மாணவர்கள் - நவீன்குமார் தேர்வு ரத்து என்ற செய்தி கேட்ட தும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக் காக காத்திருந்த மாணவர்களுக்கு இது பேரிழப்பு. அவர்களுடைய உழைப்பு இப்போது பயனில்லாமல் போய்விட்டது.

மீண்டும் தேர்வை நடத்துவதாக இருந்தால், அது எவ் விதக் குளறுபடியும் இல்லாமல் மிகச் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும்.

ஒன்றிய அரசின் பொறுப்பற்றத் தன்மை - சுப்பிரமணியம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மற் றும் நீட் என இரண்டுக்கும் தயாராகி வரும் மாணவர்களும் பெற்றோர்க ளும் பெரும் அழுத்தத்தில் இருக் கிறார்கள்.

இதில் குளறுபடிகள் நடப் பது வாடிக்கையாகிவிட்டது. வினாத் தாள் கசிவுக்கும் ஒன்றிய அரசுக்கும் சம்பந்தமே இல்லை என்று கை கழுவ முடியாது.

முறைகேடுகள் ஒருபுறம், கடினமான வினாத்தாள்கள் ஒருபுறம் என மாணவர்களை தற்கொலை விளிம்புக்கே கொண்டு செல்கிறார் கள். இந்த தேர்வே தேவையில்லை என்பதே பலரது எண்ணமாக உள் ளது.”

தீர்வு என்ன? - துரை திடீர் மாற்றங்களால் மாணவர் கள் மன அழுத்தத்திற்கு உள்ளா கிறார்கள்.

வினாத்தாள்களை விமா னம் மூலம் பாதுகாப்பாக கொண்டு வருவது போன்ற ரகசிய திட்டங் களை செயல்படுத்தக் கூட இவர்க ளால் முடியவில்லை. இவ்வளவு சர்ச்சைகளுக்கு இடையில் தமிழ் நாட்டிற்கு ஏன் நீட் தேர்வு? பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவச் சேர்க்கையை நடத்தி னால் மாணவர்களுக்கு பெரிய நிம் மதியாக இருக்கும்.

மக்களின் இந்த கருத்துகள் அனைத்தும் ஒரு புள்ளியில் இணை கின்றன: ”நீட் தேர்வு என்பது மாணவர் களின் அறிவை சோதிக்கும் முறையை விட, அவர்களின் மன உறுதியையும் எதிர்காலத்தையும் சிதைக்கும் ஒன்றாகவே மாறிவிட் டது.

வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அரசு உரிய தீர்வு காண வேண் டும்.

இல்லையெனில், கடந்த காலங் களைப் போலவே 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப் படையிலேயே மருத்துவச் சேர்க்கையை நடத்த வேண்டும் என் பதே தமிழக மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.