ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வு: கட்டணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
8 Jul 2026, 11:16 am
<p>ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை திரும்பப் பெற தேவையான வங்கிக் கணக்கு விவரங்களை உறுதிப்படுத்தவும், திருத்தம் செய்யவும் வழங்கப்பட்ட காலக்கெடுவை தேசிய தேர்வு முகமை (NTA) ஜூலை 14 இரவு வரை நீட்டித்துள்ளது.</p><p>கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தேர்வுக் கட்டணத்தை திரும்பப் பெறுவதற்காக தேர்வர்கள் தங்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.</p><p>இந்த பணிகளை மேற்கொள்ள வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்வர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மேலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தேர்வர்கள் ஜூலை 14 இரவு வரை வங்கிக் கணக்கு விவரங்களை உறுதிப்படுத்தவோ அல்லது தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவோ முடியும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.</p><p>குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேவையான விவரங்களை சரியாக பதிவு செய்தால் மட்டுமே தேர்வுக் கட்டணத்தை திரும்பப் பெறும் நடைமுறை மேற்கொள்ளப்படும் என்றும் தேர்வர்கள் காலதாமதம் செய்யாமல் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது</p>
