தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: ரத்து செய்யப்பட்ட தேர்வு கட்டணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்!

23 May 2026, 11:28 am
நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: ரத்து செய்யப்பட்ட தேர்வு கட்டணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்!

ரத்து செய்யப்பட்ட நீட் தேர்வுக்கு செலுத்திய கட்டணத்தை தேர்வர்கள் திரும்ப பெற மே 27 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது

நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி நடைபெற்ற இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டது.

இந்த தேர்வுக்காக செலுத்திய கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான விண்ணப்ப செயல்முறையை தேசிய தேர்வு முகமை (NTA) தொடங்கியுள்ளது. தேர்வர்கள் மே 27 ஆம் தேதி வரை தங்களது வங்கி கணக்கு விவரங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தேர்வர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in தளத்திற்குச் சென்று, “Fee Refund Window for NEET (UG) – 2026” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். பின்னர், வங்கி கணக்கு எண், IFSC குறியீடு உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தவறில்லாத வங்கி விவரங்களை வழங்குமாறு தேசிய தேர்வு முகமை கேட்டுக்கொண்டுள்ளது. தேவையெனில் ரத்து செய்யப்பட்ட காசோலை (cancelled cheque) நகலையும் பதிவேற்றலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.