தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒரு மாணவியின் மரணத்திலிருந்து ஒரு தேர்வு முகமையின் தோல்வி வரை!

23 Jun 2026, 9:15 pm
ஒரு மாணவியின் மரணத்திலிருந்து ஒரு தேர்வு முகமையின் தோல்வி வரை!

ஒரு மாணவியின் மரணத்திலிருந்து ஒரு தேர்வு முகமையின் தோல்வி வரை!

2024 மே 5 அன்று 23.33 லட்சம் மாண வர்கள் நீட் தேர்வு எழுதியபோது, ஜார்க்கண்டின் ஹசாரிபாக்கில் தேர்வு தொடங்கும் முன்பே வினாத்தாள் கசிந்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து, 2026 மே 3 அன்று, தேசிய தேர்வு முகமை (NTA) நியமித்த பாட நிபுணரே கசிவின் பின்னணியில் இருந்து மீண்டும் ஒரு பெரும் முறைகேடு அரங்கேறியது. இந்தத் தொடர் வினாத்தாள் கசிவுகள் தற்செயலானவை அல்ல; இது ஒரு தேசிய அமைப்பின் அடிப்படை வடிவமைப்பில் உள்ள குறைபாடு ஆகும். நீட் தேர்வை வெறும் சீர்திருத்தங்களுக்கு உட்படுத்துவது போதாது; அது முற்றிலும் ரத்து செய்யப்பட்டு, மருத்துவக் கல்வி அனுமதி உள்ளிட்ட கல்வித் துறை அரசியலமைப்பின் பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்.

என்டிஏ என்ற அமைப்பின் கட்டமைப்பு வீழ்ச்சி

2024 கசிவில் வெளி மாநிலத் தரகர்களும் சால்வர்களும் பொருளாதார குற்றப் பிரிவினரால் கண்டறியப்பட்டனர். முப்பது முதல் ஐம்பது லட்சம் ரூபாய் வரை செலுத்திய மாணவர்களுக்காக, எய்ம்ஸ் பட்னா உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களே சால்வர்களாகச் செயல்பட்டனர். ஆனால் 2026-ல், புனே பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் மருத்துவர்கள் அடங்கிய நெட்வொர்க் மூலம் வினாத்தாள் கசிந்ததால், மே 12 அன்று என்டிஏ ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்து மறுதேர்வு அறிவித்தது. நாசிக்கில் ஒரு மருத்துவர் மூலத் தகவலை 15 லட்சத்திற்கு விற்றதும், புனேவில் பேராசிரியர்கள் இருவர் இந்த வலையமைப்பின் சூத்திரதாரிகளாகக் கைது செய்யப்பட்டதும் சிபிஐ விசாரணையில் அம்பலமானது. தேசிய தேர்வு முகமை (NTA) என்பது நாடாளுமன்றச் சட்டத்தால் உருவானது அல்ல; அது 2018-இல் ஒரு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது. வியப்பூட்டும் விதமாக, வெறும் 25 நிரந்தரப் பணியாளர்களை மட்டுமே கொண்டு, ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழி யர்களை நம்பி ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களுக்கான 18-க்கும் மேற்பட்ட தேசியத் தேர்வுகளை இந்த அமைப்பு நடத்து கிறது. இத்தகைய பலவீனமான கட்டமைப் பால் தேர்வு மையங்களை முறையாகக் கண்காணிக்க முடிவதில்லை. தேர்வு மைய நிர்வாகம் போன்ற முக்கியப் பணிகள் தனியார் வெளியாட்களிடம் ஒப்படைக்கப்படுவதன் விளைவே, ஒரு பள்ளியின் முதல்வரே நகர ஒருங்கிணைப்பாளராக இருந்து கேள்வித் தாளைத் திருடும் வாய்ப்பாக மாறுகிறது. ஒரு அமைப்பால் தானே நியமிக்கப்பட்டவர்களே, அந்த அமைப்பின் நம்பகத்தன்மையைக் குலைக்கும் போது, தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்ற விளக்கம் இனி பொருந்தாது.

தகுதி என்ற பெயரில் ஒரு பண வடிகட்டி

ஒரே நாளில் நடத்தப்படும் 180 பலதேர்வுக் கேள்விகள் (MCQ) ஒருபோதும் ஒரு மருத்துவரின் பரிவு, சமூகப் பொறுப்புணர்வு அல்லது கிராமப்புற உள்கட்டமைப்பைப் புரிந்துகொள்ளும் திறனை அளவிட முடியாது. அது வெறும் நினைவாற்றலையும் கோச்சிங் மைய உத்திகளையும் மட்டுமே வெகுமதி அளிக்கிறது. மேலும், அரசுக் கல்லூரிகளில் இடம் பெற 720-க்கு 600-க்கும் மேல் மதிப் பெண் தேவைப்படும் சூழலில், தனியார் கல்லூரிகளின் மேலாண்மை ஒதுக்கீட்டில் வெறும் 150 முதல் 300 மதிப்பெண்கள் பெற்ற பணக்கார மாணவர்களுக்கு இடம் கிடைக்கிறது. முதுநிலைப் படிப்புகளில் பூஜ்ஜியம் அல்லது எதிர்மறை மதிப்பெண் பெற்றி ருந்தாலும், கோடிக்கணக்கில் பணம் செலுத்தத் தயாராக இருந்தால் அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் போன்ற உயிருக்கு ஆபத்தான முக்கியப் பிரிவுகளில் இடம் கிடைக்கும் அவலம் நிலவுகிறது. இது நீட் தேர்வின் தார்மீக அறத்தையே சிதைக்கிறது. இறுதியில் முன்னிறுத்தப்படுவது மாணவரின் மருத்துவத் திறமை அல்ல, அவருடைய குடும்பத்தின் பணவசதி மட்டுமே.

சமூக நீதிப் பாதிப்பும் மனித விலையும்

கோட்டா அல்லது ஹைதராபாத் போன்ற நகரங்களில் நீட் பயிற்சிக்காக ஆண்டுக்கு 2.5 லட்சம் முதல் 4.5 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. நீதிபதி ஏ.கே. ராஜன் குழுவின்படி, தமிழ்நாட்டில் மட்டும் நீட் கோச்சிங் தொழில் ஆண்டுக்கு ரூ. 5,750 கோடி யாகவும், தேசிய அளவில் ரூ. 50,000 கோடி யாகவும் உள்ளது. நீட் தேர்வில் பங்கேற்பா ளர்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானோர் இத்தகைய வணிகமயமான கோச்சிங் மூலமே வருகின்றனர். இதன் விளைவாக, தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வி மாணவர்களின் மருத்துவச் சேர்க்கை 19.79 விழுக்காட்டிலிருந்து 1.99 விழுக்காடாகவும், கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 65 விழுக்காட்டிலிருந்து 49.9 விழுக்காடாகவும் சரிந்தது. அரியலூரைச் சேர்ந்த மாணவி எஸ். அனிதா பிளஸ் டூ தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவ இடம் கிடைக்காமல் 2017-இல் தற்கொலை செய்து கொண்டார். 2017 முதல் 2021 வரை தமிழ்நாட்டில் 26-க்கும் மேற்பட்ட மாண வர்களும், இந்திய அளவில் நூற்றுக்கணக் கான மாணவர்களும் நீட் அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். பொருளாதாரத் தடையின் மூலம் இட ஒதுக்கீட்டு உரிமைகளை இந்தத் தேர்வு மறைமுகமாக முடக்குகிறது.

கூட்டாட்சி உரிமை மீதான தாக்குதல்

இந்திய அரசியலமைப்பின்படி கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. 2021 செப்டம்பரில் தமிழக சட்டமன்றம் ஒருமன தாக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் காலம் தாழ்த்தி திருப்பி அனுப்பி னார். மீண்டும் சட்டமன்றத்தில் அது நிறை வேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட நிலையில், 2025 மார்ச் 4 அன்று ஜனாதிபதி அலுவலகம் அதற்கு மறுப்புத் தெரிவித்தது. கல்வியறிவு மற்றும் பொது சுகாதாரத்தில் முன்னோடி மாநிலங்களாகத் திகழும் தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் போன்ற மாநி லங்களின் ஜனநாயகக் குரல், ஒன்றிய அரசின் ஒற்றை அதிகாரத்தால் ஒடுக்கப்படுவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.

கணித ரீதியான தோல்வியும் சிதையும் பள்ளிக்கல்வியும்

ஒவ்வொரு ஆண்டும் 23 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினாலும், ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருக்கும் மருத்துவ இடங்கள் 1.08 முதல் 1.18 லட்சம் மட்டுமே. அதாவது தோராயமாக 20 மாணவர்களில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது. 95 விழுக்காட்டிற்கும் அதிகமான பதின்வயது மாணவர்கள் தங்கள் உழைப்பைக் கொட்டியும் ஏமாற்றத்தையே சந்திக்கிறார்கள். இது தனிநபர் திறமையின் குறைபாடு அல்ல; மாறாக, இடங்களை விட 20 மடங்கு மாணவர்களை அனுமதிக்கும் தேர்வு அமைப்பின் கணித ரீதியான வடிவமைப்புக் கோளாறாகும். இதன் காரணமாக பள்ளிக்கல்வியின் ஒட்டுமொத்த நோக்கமே மாறிப்போயுள்ளது. கலை, விளையாட்டு, வாசிப்பு, அறிவியல் ஆர்வம் போன்ற அனைத்துப் பாடப் புறச் செயல்பாடுகளும் தேவையற்ற நேர விரயமாகக் கருதப்பட்டு, பள்ளிக்கல்வி என்பது வெறும் MCQ பயிற்சிக் கூடமாகச் சுருங்கிப்போயுள்ளது. பல குடும்பங்கள் கடன் வாங்கியும், நிலங்களை அடமானம் வைத்தும் கோச்சிங் கட்டணங்களைச் செலுத்தி நடுத்தெருவுக்கு வரும் அவலநிலையே தொடர்கிறது.

கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற வேண்டும்

2027 முதல் நீட் தேர்வைக் கணினி மயமாக்கு வதாக ஒன்றிய அரசு அறிவித்தாலும், அது முறைகேடுகளின் வடிவத்தை மாற்றுமே தவிர தீர்வாகாது. இதற்கு ஒரே தீர்வு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதே ஆகும். நீட் இல்லாத காலத்தில், பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் கிராமப்புற மாணவர்களுக்கும் சம வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு மாநிலத்தின் ஆரோக்கியத் தேவை களும் உள்கட்டமைப்பும் வேறுபட்டவை; அதை மாநில அரசுகளே சிறப்பாகக் கையாள முடியும். தேசிய மருத்துவ ஆணையம் வழிகாட்டும் அமைப்பாக மட்டுமே இருக்க வேண்டும். நீட் தேர்வு கடந்த 10 ஆண்டுகளில் இரு முறை அதன் அடிப்படை நம்பகத்தன்மையை முழுமையாக இழந்து, மாணவர்களின் உயிரைப் பறித்து, வணிகக் கல்வி முறையை மட்டுமே ஊக்கப்படுத்தியுள்ளது. இனி தேவை வெறும் நிர்வாகச் சீர்திருத்தம் அல்ல, கொள்கை ரீதியான முழுமையான மாற்றம். நீட் தேர்வு முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும். கல்வி உரிமைகள் மாநிலங்களுக்கே திரும்ப வழங்கப்பட்டு, சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.