நாட்டிலேயே முதல்முறை நீட் தேர்வுக்கு ஊரடங்கு விதிப்பு
19 Jun 2026, 8:56 pm

நாட்டிலேயே முதல்முறை நீட் தேர்வுக்கு ஊரடங்கு விதிப்பு

நீட் மறுதேர்வு ஜூன் 21 அன்று நடை பெறுகிறது. இந்த தேர்வை முன்னிட்டு தெலுங்கானா மாநிலம் ஹைத ராபாத் அருகே சைபராபாத் காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் ஜூன் 21, ஞாயிற்றுக்கிழமை அன்று ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து சைபரா பாத் காவல் ஆணையர் டாக்டர் எம். ரமேஷ் வெள்ளியன்று உத்தரவிட்டுள்ளார்.

பிஎன்எஸ் பிரிவு 163-இன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தர வின்படி, தேர்வு மையங்களில் இருந்து 200 மீட்டர் சுற்றளவிற்குள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்குக் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு தேர்வு நடக்கும் நாளன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமலில் இருக்கும்.

மேலும், தேர்வு மையங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவிற்குள் உள்ள இணைய மையங்கள் மற்றும் ஜெராக்ஸ் கடைகள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் பறக்கும் படை உறுப்பி னர்கள், ராணுவத்தினர், காவல்துறை யினர், பணியில் இருக்கும் ஊர்க்காவல் படையினர் மற்றும் இறுதி ஊர்வலங் களுக்குப் பொருந்தாது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறை யாக ஒரு தேர்வுக்காக ஊரடங்கு விதிக்கப் படுவது இதுவே முதல் முறையாகும்.