நீட்டி முழக்குவோம்
23 May 2026, 11:51 pm

நீட்டி முழக்குவோம்

ஸ்டெத் கனவு தோற்றுப்போனதால் நடந்த டெத் லிஸ்ட் நீளமானது. பல நடுத்தர மக்களின் வாழ்நாள் சேமிப்பு கோச்சிங் சென்டருக்கு கொட்டிக் கொடுக்கப்டுகிறது. ஆனைவிலை. குதிரைவிலையை விட அதிகமாகிவிட்டது மருத்துவப்படிப்பின் இன்றைய விலை.

மெடிக்கல் சீட்டும் லாட்டரி சீட்டுபோல யாருக்கு கிடைக்கும்? ஊகிக்க முடியாது. பகல் கொள்ளையர்கள் தங்கிப்போன பாழைடைந்த மண்டபங்கள் சில தனியார் மருத்துவகல்லூரிகளாக மறுஅவதாரம் எடுக்கின்றன.

நீட்டால் திறமையான மருத்துவர்கள் உருவாவர்கள் என்ற உலுத்துப்போன வாதம் இனிமேல் எடுபடாது. தேர்வுமுகமை தேறாமுகமை ஆகிவிட்டது. எல்லா தேர்வுகளிலும் படிந்து விட்டது ஊழலின் பாசம்.

நீட் குறித்து ரிதாட் தொடங்கட்டும். பிளஸ் டு மதிப்பெண் அடிப்படையில் மெடிக்கல் சீட் கிடைக்கட்டும். நாட்டுக்குள் கேட்கட்டும் நீட்டுக்கு எதிரான குரல்.