நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் - கைது!
14 May 2026, 9:33 pm

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் - கைது!

சென்னை, மே 14 - நீட் தேர்வில் தொடர்ந்து நடைபெறும் குளறுபடிகளைக் கண்டித்தும், தேசிய தேர்வு முகமையை (NTA) உடன டியாகக் கலைக்க வலியுறுத்தி யும் சென்னையில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகமான சாஸ்திரி பவனை முற்றுகை யிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

வியாழனன்று (மே 14) நடை பெற்ற இந்த போராட்டத்தின் போது, முற்றுகையில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதேபோல், இந்திய மாண வர் சங்கத்தினர் மாநிலம் முழு வதும் உள்ள பல்வேறு ஒன்றிய அரசு அலுவலகங்களை முற்று கையிட்டுப் போராட்டம் நடத்திய நிலையில், அங்கும் காவல்துறையினர் மாணவர் களைக் கைது செய்தனர்.

சென்னையில் நடைபெற்ற இந்த சாஸ்திரி பவன் முற்று கைப் போராட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் பலர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்டத் தலைவர் களான மோகன கிருஷ்ணன் (வட சென்னை), ரவிச்சந்திரன் (மத்திய சென்னை), அமர்நீதி (தென் சென்னை) ஆகியோரும், மாவட்டச் செயலாளர்களான க. அகல்யா (வட சென்னை), கு.தமிழ் (மத்திய சென்னை), ச.ஆனந்குமார் (தென் சென்னை) உள்ளிட்ட முக்கியப் பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

நீட் என்றாலே முறைகேடு என்றாகி விட்டது! தௌ. சம்சீர் அகமது குற்றச்சாட்டு

இந்தத் தீவிரப் போராட்டத்தின் போது, இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தௌ. சம்சீர் அகமது செய்தி யாளர்களைச் சந்தித்துப் பேசி னார். அப்போது அவர், “தற்போது ‘நீட்’ என்றால் முறைகேடு, முறை கேடு என்றால் ‘நீட்’ என்ற அவல நிலையே நீடிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ‘நீட்’ தேர்வில் முறை கேடுகள் அரங்கேறி வருகின்றன. கடந்த 2024 ஆம் ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தபோது, உச்ச நீதிமன்றம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை நடத்திய பிறகும் முறைகேடுகளோ, வினாத்தாள் கசிவோ இன்னும் நின்றபாடில்லை” என்று சாடினார்.

மேலும், “இந்த ஆண்டும் வினாத்தாள் கசிந்துள்ளது அம்பல மாகி உள்ளது” என்று குறிப்பிட்ட அவர், இதற்கு மகாராஷ்டிரா மாநில பாஜக இளைஞர் அணி யைச் சேர்ந்த ஒருவரே முக்கியக் காரணம் என்பது தெரியவந்துள்ள தாகவும்” குற்றம் சாட்டினார். “நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமையும் (NTA), கோச்சிங் சென்டர் மாபியாக்களும் பாஜகவும் கைகோர்த்துக் கொண்டு இத்தகைய பிரம்மாண்ட முறைகேடுகளைச் செய்து வருவதாக” அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். “டெலிகிராம் செயலியில் ரக சிய லிங்க் அனுப்பி வினாத்தாள் டவுன்லோடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளிச்சத்திற்கு வந்து ள்ளதால், தேசிய தேர்வு முகமை தனது முழு நம்பகத்தன்மையை யும் இழந்துவிட்டது” என்றும் அவர் கூறினார்.

முக்கியக் கோரிக்கைகள்

கடந்த முறை தவறு நடந்தபோதே ஒன்றிய கல்வி அமைச்சர் அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்றுப் பதவி விலகியிருந்தால், இதுபோன்ற தொடர் தவறுகளைத் தடுத்திரு க்கலாம் என்று தெரிவித்த சம்சீர் அகமது, “இந்த வினாத்தாள் கசிவு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தின் நேரடி மேற்பார்வையில் முழு மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என வலியுறுத்தினார்.

நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்

“நீட் தேர்வு ரத்து செய்யப் பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மருத்துவச் சேர்க்கையை அந்தந்த மாநிலங்கள் ஏற்கெ னவே பின்பற்றி வந்த பழைய முறைப்படியே (பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில்) நடத்த அனுமதிக்க வேண்டும். முறைகேடுகளுக்குக் காரணமான தேசிய தேர்வு முகமை யை முழுமையாகக் கலைக்க வேண்டும்” எனவும் போராட்ட த்தில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.