தீக்கதிர் முக்கிய செய்திகள்
6 Jun 2026, 9:18 pm

எழுத்தாளர் அசோக் குமார் பாண்டே

நீட், சிபிஎஸ்இ-க்கு பிறகு, கியூட் தேர்விலும் முறைகேடு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்தத் தெரியாத அரசாங்கம், நாட்டைத் திறம்பட நடத்தும் என்று எதிர்பார்ப்பவர்கள் உண்மையிலேயே மிகவும் ‘கியூட் (CUTE - அப்பாவி/அழகானவர்கள்)’ தான்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்

பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலி என்கவுண்டர்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளை அரசாங்கம் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கின்றன. போலி என்கவுண்டர்களில் பிரச்சனை அல்லது உண்மை வெளிப்பட்டால் அதிகாரிகளை குற்றவாளிகளாக மாற்றுகிறது பாஜக அரசு.

சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்

பிரதமர் மோடி அடிக்கடி தேர்வு குறித்த விவாதம் நடத்துகிறார். ஆனால் இன்று தேர்வு முறைகேடுகள் பிரம்மாண்டமாக அரங்கேறியுள்ளன. இதனை பற்றி பேச மறுக்கிறார். முறைகேடுகளால் மாணவர்கள் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடிக்கு யார் பொறுப்பேற்பார்கள்? யார் இதற்குப் பொறுப்பாக்கப்படுவார்கள் என்பதுதான் உண்மையான கேள்வி.

ஊடக உண்மை சரிபார்ப்பாளர் முகமது ஜுபைர்

தெற்காசியாவின் மிகப்பெரிய மல்டிமீடியா செய்தி முகமையான ஏஎன்ஐ (ANI), அதானியின் செய்தி முகமையான ஐஏஎன்எஸ் (IANS) ஆகிய இரண்டுமே ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தில் (கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்) இருந்து ஒரு ட்வீட் கூட செய்யவில்லை. எஜமானரிடமிருந்து வரும் உத்தரவுகளுக்காகக் காத்திருக்கிறார்கள் போலும்.