தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வு ரத்து கோரி போராடிய இளைஞர், மாணவர்கள் கைது அமைச்சர் கருத்துக்கு வாலிபர் சங்கம் கண்டனம்

22 Jul 2026, 9:49 pm
நீட் தேர்வு ரத்து கோரி போராடிய இளைஞர், மாணவர்கள் கைது  அமைச்சர் கருத்துக்கு வாலிபர் சங்கம் கண்டனம்

நீட் தேர்வு ரத்து கோரி போராடிய இளைஞர், மாணவர்கள் கைது அமைச்சர் கருத்துக்கு வாலிபர் சங்கம் கண்டனம்

சென்னை, ஜூலை 22: நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் மற்றும் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் 48 மணி நேரக் காத்திருப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, சென்னை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடு துறை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், மதுரை, திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போரா டத் தயாரான தோழர்களைக் காவல்துறை யினர் தடுத்து நிறுத்தி அராஜகமான முறை யில் கைது செய்துள்ளனர். ஜனநாயக வழி யில் போராடுபவர்களைக் கைது செய்யும் காவல்துறையின் இத்தகைய நடவ டிக்கையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக் குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் சிலர் தூண்டு தலின் பேரில்தான் போராட்டம் நடைபெறு கிறது என்று போராடுபவர்களைக் கொச்சைப் படுத்திப் பேசியுள்ள தமிழகக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது கருத்தைத் திரும்பப் பெற்று மாணவர்களிடம் பகிரங்க மாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலி யுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாணவர்களும், இளைஞர் களும் இந்த உரிமை மீட்புப் போராட்டக் களத் திற்குத் திரண்டு வர வேண்டும் என்று மாநிலத் தலைவர் செல்வராஜ், மாநிலச் செயலாளர் எஸ்.கார்த்திக் ஆகியோர் விடுத் துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.