நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தலித் மாணவர் தற்கொலை குடும்பத்தினரைச் சந்தித்து சிபிஎம் தூதுக்குழு நேரில் ஆறுதல்
30 May 2026, 9:06 pm

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தலித் மாணவர் தற்கொலை குடும்பத்தினரைச் சந்தித்து சிபிஎம் தூதுக்குழு நேரில் ஆறுதல்

ஜெய்ப்பூர் வினாத்தாள் கசிவு காரண மாக மே முதல் வாரத்தில் நடைபெற்ற நீட் தேர்வை ஒன்றிய மோடி அரசு ரத்து செய்துள் ளது. இரவு, பகல் பாராமல் கடின மாக படித்து தேர்வு எழுதிய 22 லட்சம் மாணவர்கள் கடும் மன உளைச்சலில் உள்ளனர். குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தின் ஜுன் ஜுனு மாவட்டத்தில் பிரதீப் மேக்வால் (23) என்ற மாணவர் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை தாங்கிக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரதீப் மேக்வால், கடந்த மூன்று ஆண்டுகளாக சிகாரில் தங்கி நீட் தேர்விற்குத் தயாராகி வந்தார். அவரது தந்தை ராஜேஷ் மாஹிச் மகனின் கல்வி, பயிற்சி வகுப்பு களுக்காக கணிசமான அளவில் கடன் வாங்கி படிக்க வைத்துள் ளார். இதனால் ரத்து செய்யப்பட்ட தேர்வில் 650 மதிப்பெண்கள் வரை பெறுவோம் என்ற நம்பிக்கையில் பிரதீப் இருந்துள்ளார். ஆனால் வினாத்தாள் கசிவு காரணமாக திடீரென நீட் தேர்வு ரத்து செய்யப் பட்டதால் கடும் மன உளைச்ச லுக்கு ஆளாகி, பிரதீப் மேக்வால் மே 15 அன்று தூக்கிட்டுத் தற் கொலை செய்து கொண்டார். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் தலைமைக்குழு உறுப்பி னரும், நாடாளுமன்ற உறுப்பின ருமான (சிகார்) அம்ரா ராம் தலை மையிலான குழுவினர் தற்கொலை செய்து கொண்ட தலித் மாணவர் பிரதீப் மேக்வாலின் குடும்பத்தி னரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், “பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவ ருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும். இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப் படும்” என அம்ரா ராம் கூறினார். இந்தச் சந்திப்பின் போது சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்வான் பூனியாவும் தூதுக்குழு வில் இருந்தார் என்பது குறிப்பி டத்தக்கது.