நீட் 2026 வினாத்தாள் கசிந்ததா? ராஜஸ்தானில் சிறப்பு காவல் குழு தீவிர விசாரணை
11 May 2026, 1:30 pm
<p>ராஜஸ்தானில் தேர்வுக்கு முன் விநியோகிக்கப்பட்ட வினா வங்கியுடன் தேர்வு வினாத்தாள் ஒத்துப்போவதால் வினாத்தாள் கசிந்தத என்றசந்தேகம் வலுத்துள்ளது.</p><p>இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 3ஆம் தேதி நடைபெற்றது. ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு முன்பாக சில மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட கையால் எழுதப்பட்ட வினா வங்கி, உண்மையான நீட் தேர்வு வினாத்தாளுடன் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது</p><p>இதனால் நீட் 2026 வினாத்தாள் கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.</p><p>வினாத்தாள்கள் எவ்வாறு வெளியேறின, இதில் யார் யார் தொடர்புடையவர்கள் என்பது குறித்து அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
