தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீலனின் யோசனை! - புதுச்சேரி அன்பழகன்

28 Feb 2026, 2:29 pm
நீலனின் யோசனை! -  புதுச்சேரி அன்பழகன்
<p><strong>நீலனின் யோசனை!&nbsp;</strong></p> <p>ஒரு காலத்தில் அந்தப் பெரிய காடு அமைதியாக இருந்தது, இப்போது எங்கு பார்த்தாலும் மனிதர்கள் மரங்களை வெட்டி எடுத்துச் சென்கின்றனர். பறவைகள் கூடுகட்ட முடியாமல் தவிக்கின்றன. விலங்குகள் வாழ்வதற்கு இடபெயர முடியாமல் ஊர்பகுதியில் மாடிக்கொள்கின்றன. &ldquo;இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்!&rdquo; என்று தீர்மானித்த காட்டின் பெரியவர்கள் (விலங்குகள் மற்றும் பறவைகள்), ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். பெரியவர்கள் தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, குட்டி விலங்குகளுக்கோ எதைப் பற்றியும் கவலை இல்லை. விளையாட வேண்டும் என்ற துடிப்பு மட்டும் தான் இருந்தது. நீலன் என்ற குட்டிப் பெண் மான், &ldquo;என்னை யாரால் பிடிக்க முடியும்?&rdquo; என்று சவால் விட்டுத் &nbsp;துள்ளிக்குதித்து ஓடி வந்தது. வேகமாக வந்த நீலன், ஆந்தை தாத்தா &nbsp;அமர்ந்திருந்த மரக்கிளையை பலமாக முட்டியது. &ldquo;ஐயையோ!&rdquo; என்று அலறிய &nbsp;ஆந்தை தாத்தா, கீழே விழப் போய் மெது வாகச் சிறகை விரித்துச் சமாளித்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த பெரிய &nbsp;கரடி, &ldquo;ஏன் இப்படிச் சத்தம் போடுகி றீர்கள்? இங்கே முக்கியமான கூட்டம் நடக்கிறது, அமைதியாக இருங்கள்&rdquo; என்று அதட்டியது. அப்போதுதான் நீலன் கவனித்தது, தான் ஓடி வந்த வேகத்தில் ஒரு குட்டி &nbsp;அணில் மீது மோதி, அது கீழே விழுந்து கிடந்தது. &ldquo;ஐயோ, மன்னித்துவிடு நண்பா!&rdquo; என்று நீலன் வருத்தப்பட்டது. ஆந்தை தாத்தா கனிவோடு கேட்டார், &nbsp;&ldquo;நீலன், ஏன் இப்படித் தொந்தரவு செய்கி றாய்?&rdquo; நீலன் கண்களில் நீருடன் சொன்னது, &nbsp;&ldquo;தாத்தா, எங்களுக்கு விளையாட ரொம்ப ஆசையா இருக்கு. ஆனா, &nbsp;இங்கே விளையாடினால் மத்தவங்க ளுக்குத் தொந்தரவா இருக்குன்னு சொல்றீங்க... நாங்க எங்கேதான் போறது?&rdquo; அப்போது கூட்டத்தில் இருந்த சிவ சங்கரன் என்ற புலிக்குட்டி முன்னே வந்து சொன்னது: &ldquo;நண்பர்களே! கவலைப்படாதீர்கள். அதோ அந்தப் பக்கம் பாருங்கள், ஒரு &nbsp;பெரிய புல்வெளி இருக்கிறது. அங்கே &nbsp;மரங்களோ, செடிகளோ இல்லை. வெறும் மென்மையான புற்கள் மட்டும் தான்! நாம் அங்கே போனால் யாருக்கும் தொந்தரவு இருக்காது, நமக்கும் தாரா ளமாக இடம் கிடைக்கும். நாம் எவ்வ ளவு வேண்டுமானாலும் ஓடிப் பிடித்து விளையாடலாம்!&rdquo;என்றது. இந்த யோசனை எல்லா குட்டி களுக்கும் மிகவும் பிடித்திருந்தது. &ldquo;ஆமாம்! அங்கே போனால் யாரும் நம்மை யாரும் தொந்தரவு செய்ய மாட் &nbsp;டார்கள், பெரியவர்களின் பேச்சுக்கும் இடையூறு இருக்காது&rdquo; என்று மகிழ்ச்சி யடைந்தன. அப்பொழுதுதான் நீலனுக்கு ஒரு யோசனை வந்தது.நாம் ஏன்அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்றது. உடனே எல்லா குட்டிகளும் நம்மை யாரும் கூப்பிடவில்லையே என்றன. காட்டிற்கு எதோ பாதிப்பு என்ப தால்தான் அந்த கூட்டம் நடக்கிறது. காட்டிற்கு பாதிப்பு என்றால் நமக்கும்தானே! என்றான் நீலன். &nbsp;&ldquo;சரி நாம் பிறகு விளையாடலாம்.இப்பொழுது என்ன செய்ய வேண்டும்&rdquo; &nbsp;என்றன குட்டிகள். நாம் அங்கு சென்று &nbsp;அமைதியாக என்ன முடிவு செய்கி றார்கள் என்று முதலில் கவனிப்போம். பிறகு நம்மால் என்ன செய்ய முடியும் என்று பிறகு யோசிப்போம். சரி நாம் போகலாம் என்று மகிழ்ந்து அனைத்து குட்டிகளும் அமைதியாக் கூட்டத்திற்கு சென்றன!</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.