முந்தய பக்கம்

நீலமலை தொல்லியல் நூல் அறிமுகக்கூட்டம்

25 May 2026, 11:18 pm
நீலமலை தொல்லியல் நூல் அறிமுகக்கூட்டம்
<p><strong>நீலமலை தொல்லியல் நூல் அறிமுகக்கூட்டம்</strong></p><p>அவிநாசி, மே 25- அவிநாசியில் நீலமலை தொல்லி யல் நூல் அறிமுகக்கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அவிநாசி கிளை சார்பில், நீலமலை தொல்லியல் நூல் அறிமுக கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, சங்கத் தின் மாநிலக்குழு உறுப்பினர் கோவை சதாசிவம் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் தினகரன் வரவேற்றார். இந்த நூலினை ஆசிரியர் பரமேஸ்வரி, ஆனந்த் ஆகியோர் அறிமுகம் செய்து உரையாற்றினர். இதைத்தொடர்ந்து நூல் மற்றும் பாறை ஓவியங்களை ஆய்வு செய்தது குறித்தான குறும்ப டம் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பி னர் பாவில் பாரதி பேசுகையில், நீல மலை தொல்லியல் நூலின் ஆசிரியர் கள் சுதாகர் குமரவேல் ஆகியோர் பிறந் தது கள்ளக்குறிச்சி மாவட்டம். இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அன்றைய அமைச்சர் தங்கம் தென்ன ரசு, பல லட்சம் ரூபாய் அரசாங்கம் செலவு செய்து கண்டுபிடிக்கிற வேலையை இவர்கள் இருவரும் செய் திருப்பது பாராட்டுக்குரியது, என்றார். இந்த நூலின் பெயர் நீலமலை என்று வைத்தற்கான காரணம் கூறியதற்கு, மலை நீல வடிவில் இருந்த காரண மாக நீலமலை. ஆனால், நீலகிரியில் கிரி என்பது வடமொழிச் சொல். அதன் காரணமாக நீலமலை என வைக்கப்பட் டது. அதேபோல சிந்து சமவெளி நாகரி கத்திற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என கேள்வி கேட்டனர். அதில் சிந்து சமவெளி நாகரிகம் என்பது நவ நாகரி கம்; பாறை ஓவியம் என்பது பழங்குடி நாகரீகம், என்றார். இந்நிகழ்வில், சங்கத் தின் மாநில செயற்குழு உறுப்பினர் ஈஸ் வரன், மாவட்டத் தலைவர் சம்பத், மாவட்டச் செயலாளர் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram