முந்தய பக்கம்

வேலைப் பகிர்வுகள் வேண்டும் இங்கே!

3 Jan 2026, 2:20 pm
வேலைப் பகிர்வுகள் வேண்டும் இங்கே!
<p><strong>வேலைப் பகிர்வுகள் வேண்டும் இங்கே!</strong></p> <p>பல்லவி &nbsp;ஆண்கள் செய்யும் வேலை இது பெண்கள் செய்யும் வேலை இது என்றொதுக்கி வைப்பது சரியேயில்லை! &nbsp; இருமனங்கள் இணைந்துவிட்டால் &nbsp;ஒருமனமாய் இருந்துவிட்டால் &nbsp;எந்த வேலையும் இங்கு சுமையேயில்லை! &nbsp; சரணம் -1 &nbsp;வீட்டைப் பெருக்கி கோலம் போடும் &nbsp;அந்த வேலைகளை &nbsp;ஆண் செய்தாலென்ன? &nbsp; சோறு சமைக்கும் சேலை ஓரம் &nbsp;அந்த வேட்டியும் சேர்ந்து &nbsp;நின்றாலென்ன? &nbsp; உனது படுக்கை &nbsp;தூசுகளை &nbsp;நீயே அகற்றிக் கொண்டாலென்ன? &nbsp; உனது ஆடைகளை &nbsp;நீயே துவைத்து &nbsp;உடுத்திக்கொண்டு சென்றாலென்ன? &nbsp; நீ உண்ணும் பாத்திரத்தை &nbsp;நீயே எடுத்துச் சென்று &nbsp;கழுவி வைப்பதில் தவறும் என்ன? &nbsp; கடமை என்று சொல்லி மேலும் மேலும் பெண்ணை &nbsp;பணிய வைப்பதன் பொருளும் என்ன? &nbsp;சரணம் - 2 &nbsp;மழையிலும் பனியிலும் &nbsp;சுடுகிற வெயிலிலும் &nbsp;உழைப்பதில் ஆணுக்கு நிகரானாள்! &nbsp; அந்தி சாயும் &nbsp;அவள் மட்டும் சாயாமல் &nbsp;வீட்டு வேலைகளில் தனியானாள்! &nbsp; ஒருவரை ஒருவர் &nbsp;தாங்கிக்கொள்ளும் &nbsp;வேலைப் பகிர்வுகள் வேண்டும் இங்கே! &nbsp; இல்லை என்றால் &nbsp;சமத்துவம் என்பது &nbsp;கேள்விக் குறியாய்ப் போகும் இங்கே! &nbsp; கண்ணே மணியே &nbsp;முத்தே கிளியே &nbsp;கொஞ்சுவதில் பெண் அழகானாள்! &nbsp; சுயமாய் வாழும் &nbsp;உரிமை பறித்தால் &nbsp;எப்படி பெண் இங்கு சமமாவாள்?</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram