திமுக கூட்டணிக்கு பழ. நெடுமாறன் ஆதரவு
30 Mar 2026, 3:40 pm
<p><strong>திமுக கூட்டணிக்கு பழ. நெடுமாறன் ஆதரவு</strong></p>
<p>சட்டமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், திங்களன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து, தமது ஆதரவுக் கடிதத்தை வழங்கினார். பேராசிரியர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
<p> </p>
