வாய்ப்பு வாசல் - அமர்த்தியா
3 Jun 2026, 9:45 pm

முப்படை அதிகாரிகள் – 394 பணியிடங்கள்

இந்தியாவின் முப்படைகளில் ஏதாவதொன்றில் அதிகாரி யாகப் பணி புரிவதற்கான வாய்ப்பு வந்துள்ளது. தேசியப் பாதுகாப்பு கல்விமையம்(National Defence Academy) மூலம் பயிற்சி பெற்று முழுமையாக அதிகாரியாகப் பணிபுரியலாம். இந்தப் பயிற்சிக்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். முப்படைகளிலும் மொத்தம் 394 பணியிடங்களை நிரப்பப் போகிறார்கள். வயது – ஜனவரி 1, 2006 ஆம் தேதிக்கும் ஜனவரி 1, 2011க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி – தரைப்படையில் அதிகாரியாகப் பணிபுரிய விரும்புபவர்கள் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பன்னிரெண்டாம் வகுப்பு(+2) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விமானப்படை மற்றும் கப்பல் படையில் பணிபுரிய விரும்புபவர்கள் +2 தேர்வில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடங்களைப் பயின்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறை – முதலில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்வாகும் தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் பொது அறிவு மற்றும் கணிதத்திலிருந்து வினாக்கள் இருக்கும். தவறான விடைகளுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும். எழுத்துத் தேர்வுத் தேதி – செப்டம்பர் 13, 2026. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் தேர்வு மையங்கள் இருக்கும். ஜூன் 2027இல் நேர்முகத் தேர்வு நடைபெறும். முப்படைப்பணி என்பதால் உடற்தகுதி மற்றும் மருத்துவத் தகுதி களும் உண்டு. தேர்ச்சி பெற்றவர் களுக்கு இந்த சோதனைகள் நடத்தப்படும். இந்தத் தகுதிகள், தேர்வுக்கான பாடத்திட்டம், காலிப் பணியிட விபரங்கள் உள்ளிட்டவை அறிவிக்கையில் தரப்பட்டுள்ளன. முழு அறிவிக்கையை www.upscon line.nic.in என்ற இணையதள முக வரியில் இருந்துபெற்றுக் கொள்ள லாம். விண்ணப்பிப்பதற்கான இணைப்பும் அதில் உள்ளது. இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கக் கடைசித் தேதி ஜூன் 9, 2026 ஆகும்.

யூஜிசி நெட் (CSIR-UGC NET) 2026

தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் Joint CSIR-UGC NET June 2026 தேர்விற்கான ஆன்லைன் விண்ணப்பம் வெளியாகியுள்ளது.இத்தேர்வு Assistant Professor பணியிடங்களை நிரப்ப, Junior Research Fellowship (JRF), மற்றும் Ph.D. சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிக்கும் தேசிய அளவிலான தேர்வாகும். M.Sc. / அதற்கு இணையான அறிவியல் முதுகலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு / இறுதி செமஸ்டர் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஜுன் 1, 2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகள், எஸ்சி / எஸ்டி / பெண்கள் பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் பிற பிரிவினர்களுக்கு அரசு விதிப்படி வயது தளர்வு வழங்கப்படும். Assistant Professor மற்றும் Ph.D. சேர்க்கை பிரிவுகளுக்கு வயது வரம்பு இல்லை. தேர்ந்தெடுக்கப்படும் முறை – Computer Based Test (CBT) முறையில் நடைபெறும் Objective Type MCQ தேர்வின் மூலம் தகுதி நிர்ணயிக்கப்படும். பொதுப்பிரிவினர்களுக்கு ரூ. 1150/- , ஓபிசி பிரிவினருக்கு ரூ.600 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு ரூ.325 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த கூடுதல் விபரங்கள் பெற என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 19, 2026 ஆகும்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை - 2026

வரிசை எண் தேர்வின் பெயர் அறிவிக்கை வெளியாகும் தேதி தேர்வுத் தேதி தேர்வு நாட்கள்

1. ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணியாளர் தேர்வு (நேர்முகத் தேர்வு இல்லாத) மே 20, 2026 ஆகஸ்டு 3, 2026 7 நாட்கள்

2. குரூப் – 1 ஜூன் 23, 2026 செப்டம்பர் 6, 2026 1 நாள்

3. ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணியாளர் (டிப்ளமோ/ஐடிஐ அளவிலானது) ஜூலை 7, 2026 செப்டம்பர் 20, 2026 7 நாட்கள்

4. குரூப் 2 / 2ஏ ஆகஸ்டு 11, 2026 அக்டோபர் 25, 2026 1 நாள்

5. ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணியாளர்(நேர்முகத் தேர்வுடன்) ஆகஸ்டு 31, 2026 நவம்பர் 14, 2026 4 நாட்கள்

6. குரூப் – 4 அக்டோபர் 6, 2026 டிசம்பர் 20, 2026 1 நாள்