என்டிஏ என்றால் உள்குத்து என்று பொருள்
18 Mar 2026, 3:34 pm
<p><strong>என்டிஏ என்றால் உள்குத்து என்று பொருள்</strong></p>
<p>சட்டம் ஒழுங்கைச் சரி செய்யக் கோரி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக - பாஜக கூட்டணியில், ‘கூட்டணி ஒழுங்கு’ அடியோடு சரிந்து கிடந்ததை அங்கே அரங்கேறிய கூத்துகள் அம்பலப்படுத்தியுள்ளன. யாருக்கு யார் தலைமை? “அதிமுக தலைமையிலான கூட்டணி” என்று பொள்ளாச்சி ஜெயராமன் ஒருபுறம் முழங்க, பாஜகவின் வானதி சீனிவாசனோ அதிமுக என்ற பெயரைக் கூட உச்சரிக்காமல் பிடிவாதம் காட்டினார். “எடப்பாடி தான் அடுத்த முதல்வர்” என்று அதிமுகவினர் தொண்டை கிழியக் கத்தினாலும், வானதி அக்கா அதை ‘மறந்தும்’ கூட வழிமொழியவில்லை. இது கூட்டணியா அல்லது ஒருவரை ஒருவர் கவிழ்க்க நடக்கும் குஸ்தியா எனப் பொதுமக்கள் வியக்கின்றனர். கொடிப் போர் கூட்டணியில் பிரதான கட்சி அதிமுக தான் என்று காட்டிக்கொள்ள எடப்பாடி தரப்பு முயன்றாலும், மைதானத்தில் பறந்த கொடி களில் அதிமுக கொடி பத்தோடு பதினொன்றா கவே காட்சியளித்தது. பாஜக, பாமக, அமமுக என ரகரகமான கொடிகளுக்கு நடுவே அதிமுகவின் ‘இலை’ வாடிக் கிடந்தது, அந்தக் கட்சி கூட்டணி யில் ஓரம் கட்டப்படுவதையே நாசூக்காக உணர்த்தியது. கூண்டு வேன் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை அழைத்து வந்த லட்சணமோ இன்னும் மோசம். பிராய்லர் கோழிகளை அடைத்து வரும் கூண்டு வேன்களில் தொண்டர்கள் ‘ஏற்றி’ வரப்பட்டனர். கையில் கொடுக்கப்பட்ட கோரிக்கை அட்டைகளை எந்த உணர்ச்சியும் இன்றிப் பிடித்துக்கொண்டிருந்தவர்கள், சிறிது நேரத்திலேயே அவற்றைச் சாலையோரக் குப்பையாக மாற்றி அதன் மீதே நடந்து சென்றனர். 1,500 பேர் இருந்த கூட்டத்தை 25 ஆயிரம் பேர் எனப் பொள்ளாச்சி ஜெயராமன் கணக்குச் சொன்னது, அங்கிருந்தவர்களுக்கே ‘கிச்சுக்கிச்சு’ மூட்டியது. வானதி அக்காவின் ‘ஈரான்’ வித்தை! சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை “கட்டுப்பாடு” என்று புது விளக்கம் கொடுத்துச் சமாளித்த வானதி சீனிவாசன், அடுத்துப் பிரதமர் மோடியின் சாதனையாக ஒரு ‘சர்வதேசப் பொய்யை’ அள்ளிவிட்டார். ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத்தில், மோடி பேசித்தான் இந்தியக் கப்பல்கள் அனுமதிக்கப்படுவதாக அவர் கூசாமல் பொய் சொன்னார். ஆனால் உண்மை என்னவென்றால், மோடியின் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு நிலைப் பாட்டால், இந்தியாவின் நீண்டகால நண்பனான ஈரான் இப்போது அதிருப்தியில் உள்ளது. ஈரானை ஆதரிக்கும் நாடுகளின் கப்பல்கள் தடையின்றிச் சென்று கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவின் கப்பல்கள் மட்டும் ஒவ்வொன்றாகப் பிச்சை கேட்டுப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க, அதைச் ‘சாதனை’ என்று வானதி அக்கா மாற்றிச் சொல்வதுதான் வேடிக்கை! திருப்பூரில் நடைபெற்ற என்டிஏ ஆர்ப்பாட்டக் களத்திலிருந்து... வே. தூயவன்</p>
<p> </p>
