தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறைப்படும் நீதி!

1 Jul 2026, 10:41 pm
சிறைப்படும் நீதி!

சிறைப்படும் நீதி!

சமீபத்தில் வெளியான தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் ‘இந்தியச் சிறை புள்ளி விவரங்கள் 2024’ அறிக்கை வெறும் எண்கள் அல்ல; இந்திய நீதித்துறையின் அவலச் சாட்சி யங்கள். சட்டம் கடமையாற்ற வேண்டும் என்ப தில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அது எளிய வர்களையே ஏன் குறிவைக்கிறது என்ற கேள்வி எழுகிறது.

சிறைகளில் 72.6 சதவிகிதம்பேர் விசாரணைக் கைதிகள். இவர்களில் 67.3 சதவிகிதம்பேர் பட்டி யல் சாதி, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட சமூகங்க ளைச் சேர்ந்தவர்கள்; 26 சதவிகிதம்பேர் சிறு பான்மையினர். அனைவரும் விளிம்புநிலை மக்கள். “குறிப்பிட்ட சமூகத்தினர் இயல்பாகவே குற்றவாளிகள்” என்ற காவல்துறையின் பார பட்சம், ஜனநாயகத்தின் ஆகப்பெரும் சாபக் கேடு. ஏழ்மையும், சட்ட அறியாமையும், பிணைத் தொகை செலுத்த இயலா நிலையுமே இவர்க ளைச் சிறையில் முடக்குகின்றன. ஏழைக்கு ஒரு நீதி, அதிகார வர்க்கத்திற்கு ஒரு நீதி — இதில் எங்கே சமநீதி?

கைதிகளில் 86.3 சதவிகிதம்பேர் 18-50 வய துக்குள் உள்ள உழைக்கும் தலைமுறை; பாதிக்கும் மேலானோர் 30 வயதுக்கும் குறைவான வர்கள். நாட்டின் நாளைய முகமாக இருக்க வேண்டிய இளைஞர் சமூகம் இன்று கம்பிக ளுக்குப் பின் வாடுவது, வேலையின்மையின் வடு வும் சமூகப் பாதுகாப்பின்மையின் சாட்சியுமே.

முறையான விசாரணை இன்றி, தீர்ப்பு வராமல் 30,000-க்கும் மேற்பட்டோர் 3 ஆண்டு களுக்கும் மேலாகச் சிறையில் புழுங்குகிறார்கள். இதில் 9,000-க்கும் அதிகமானோர் ஐந்து ஆண்டுகளைக் கடந்துவிட்டனர். இறுதியில், “அவர்கள் குற்றமற்றவர்கள்” என நீதிமன்றம் விடுவிக்கும்போது, அவர்கள் இழந்த இள மைக்கும், சிதைந்த குடும்பத்திற்கும், சமுதாயத் தில் இழந்த மதிப்பிற்கும் யார் பொறுப்பேற்பது?

இந்தியச் சிறைகளின் மொத்தக் கொள்ள ளவு 4,53,000 பேர் மட்டுமே. ஆனால், அடைக்கப் பட்டிருப்பதோ 5,11,542 பேர். தேசிய அளவில் சிறை களின் கொள்ளளவை விட 12.7 சதவிகிதம் அதிகம். குறிப்பாக தில்லியில் 194.6 சதவிகிதம் மற்றும் பீகாரில் 187.2 சதவிகிதம் என கொள்ள ளவை விட இருமடங்கு கைதிகள் அடைக்கப்பட் டுள்ளனர். இது மனித உரிமை மீறலின் உச்சம். சிறைகளின் பணியாளர்கள் தேவை 99,758, ஆனால் பணிபுரிவதோ 63,004 பேர் மட்டுமே.

நல்லாட்சியின் இலக்கணம் சிறைகளையும் கைதிகளையும் குறைப்பதே; நிரப்புவதல்ல. வேலையின்மையால் அவதிப்படும் இளை ஞரை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியே ஒட்டுண்ணியென, புழுவெனப் பார்க்கும் மன நிலை நீடிக்கும் வரை, சாமானிய மக்கள் நீதி யைத் தேடி எங்கே செல்வார்கள்?

அரசும் நீதி நிர்வாகமும் விரைவான, பாரபட்ச மற்ற நீதியை அடித்தட்டு மனிதருக்கும் உறுதி செய்ய வேண்டும். இல்லையேல், சட்டத்தின் மீதான சாமானியரின் நம்பிக்கை முற்றிலுமாகத் தகர்ந்துவிடும்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.