முந்தய பக்கம்

ஒன்றிய அமைச்சரை நீக்க பிரதமர் மோடிக்கு என்சிபி கடிதம்

21 Feb 2026, 3:26 pm
ஒன்றிய அமைச்சரை நீக்க பிரதமர் மோடிக்கு என்சிபி கடிதம்
<p><strong>ஒன்றிய அமைச்சரை நீக்க பிரதமர் மோடிக்கு என்சிபி கடிதம்</strong></p> <p>மும்பை ஜனவரி 28ஆம் தேதி நடைபெற்ற விமான விபத்தில் மகாராஷ்டிரா முன்னாள் துணை முதலமைச்ச ரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். &nbsp;இந்நிலையில், அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக விசா ரணை முடியும் வரை ஒன்றிய &nbsp;சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச் சர் கே.ராம் மோகன் நாயுடுவை பதவியி லிருந்து விலகுமாறு அறிவுறுத்த வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் (சரத்) பொதுச் செயலாளரும், எம்எல்ஏ வுமான ரோகித் பவார் சனிக்கிழமை பிரத மர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,&rdquo;விபத்துக்குள்ளான &lsquo;லியர்ஜெட் 45&rsquo; விமானத்தை இயக்கிய &lsquo;வி.எஸ்.ஆர்&rsquo; நிறுவனத்திற்கும் ஒன்றிய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகனுக்கும் இடையே உள்ள தொடர்புகள் குறித்து &nbsp;கடுமை யான கேள்விகள் எழுந்துள்ளன. அதனால் விசாரணை முடியும் வரை ராம் மோகன் நாயுடுவை பதவியை ராஜினாமா செய்யு மாறு கேட்டுக்கொள்கிறேன்&rdquo; என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram