தேசியவாத காங்கிரஸ் இரு அணிகள் இணைப்பு இல்லை: சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே திட்டவட்டம்
yesterday

தேசியவாத காங்கிரஸ் இரு அணிகள் இணைப்பு இல்லை: சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே திட்டவட்டம்

நாக்பூர்மகாராஷ்டிராவில் 2023ஆம் ஆண்டு எதிர்க் கட்சிகளின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக, சிவசேனாவை போன்று அஜித் பவார் மூலம் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாஜக இரண்டாக உடைத்தது. உண்மையான கட்சியின் பெயர் (தேசியவாத காங்கிரஸ்) மற்றும் சின்னம் (கடிகாரம்) ஆகியவற்றைத் தேர் தல் ஆணையம் மூலம் அஜித் பவார் பெற்றார். அதோடு மகாராஷ்டிர துணை முதலமைச்சராகவும் அஜித் பவார் பொறுப்பேற்றார். ஆனால் கட்சியின் நிறுவனரான சரத் பவாரின் பிரிவுக்கு வேறு பெயரும் (தேசியவாத காங்கிரஸ் - சரத் சந்திர பவார்), சின்னமும் (கொம்பு இசைக் கருவி) வழங்கப்பட்டது.

அஜித் பவார் மரணம்

இதனிடையே, மகாராஷ்டிர துணை முதலமைச்சராக இருந்தபோதே, அஜித் பவார் கடந்த ஜனவரி 28ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மனைவி சுனேத்ரா பவார் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்று, துணை முதலமைச்சராகவும் பதவியேற்றார்.அஜித் பவார் உயிரிழக்கும் நேரத்தில், அவரது கட்சியின் பிரிவு பாஜக கூட்டணியில் இருந்து விலகி ‘இந்தியா’ அணியில் இணையவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இந்தச் செய்தி வெளியான சில வாரங்களிலேயே அஜித் பவார் விபத்தில் உயிரிழந்தார்.

சரத் பவார்

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 86 வயதான சரத் பவார் தீவிர உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சரத் பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனே, பாஜக மற்றும் கோடி மீடியா ஊடகங்கள்,”தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளின் இணைப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒன்றிணைந்த கட்சியின் தேசியத் தலைவராக சரத் பவாரும், செயல் தலைவராக சுனேத்ரா பவாரும் பொறுப்பேற் பார்கள். சரத் பவார் அணியைச் சேர்ந்த ஜெயந்த் பாட்டீல் மற்றும் ஜிதேந்திர அவாத் ஆகியோர் மகாராஷ்டிர அரசிலும், பாரமதி மக்களவை உறுப்பினர் சுப்ரியா சுலே (சரத் பவார் மகள்) ஒன்றிய அமைச்சரவையிலும் இணைவார்கள்” என்று கடந்த 3 வாரங்களுக்கு மேலாகச் செய்திகள் வெளியிட்டு வந்தன. அதேசமயம், பிரதமர் மோடியும் சரத் பவாரைப் புகழ்ந்தும், “சரத் பவார் நாடுஉங்களிடம் உள்ளது. நாட்டை நீங்கள் -பார்த்துக்கொள்ளுங்கள் என்று என்னிடம் கூறினார்” என பல்வேறு தகவல்களை அள்ளிவிட்டார்.

முற்றுப்புள்ளி

இந்நிலையில்,தேசியவாத காங்கிரஸ் அணிகள் இணைப்பு இல்லை என சரத் பவார் பிரிவைச் சேர்ந்த சுப்ரியா சுலே உறுதிபட கூறியுள் ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “எனது சகோதரர் அஜித் பவார் உயிருடன் இருந்தவரை இரு கட்சிகளின் இணைப்புக்கான சாத்தியமும் உயிர்ப்புடன் இருந்தது. அவரது மரணம் கட்சிகள் இணைப்பு குறித்த விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது” என்று கூறி, தேசியவாத காங்கிரஸ் இரு அணிகள் இணைப்பு இல்லை என்று உறுதியாகத் தெரிவித்தார்.

அஜித் பவார் பிரிவும் மறுப்பு

அதேபோல, பாஜக கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இதை மறுத்துள் ளது. இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (அஜித்) மகாராஷ்டிர மாநிலத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுனில் தாட்கரேவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். இதுபற்றி அவர்கூறுகையில், “கட்சிகளின் இரு பிரிவுகள் இணைப்பு தொடர்பாக எந்த மட்டத்திலும் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. சரத் பவாரின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே பிரபுல் படேல் அவரைச் சந்தித்தார். ஆழமான ஆலோசனைக்குப் பிறகே நாங்கள் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம். தற்போதும் நாங்கள் அந்தக் கூட்டணியில்தான் இருக்கிறோம்; இனியும் அந்தக் கூட்டணியில்தான் இருப்போம்” என்றார்.இதன்மூலம், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் இரு அணிகளும் இணைய உள்ளதாக ஊடகங்கள் வெளியிட்டு வந்த செய்திகள் போலியானவை என்பதுநிரூபணமாகியுள்ளது. அதே சமயம் பாஜகவின் புரளியும் முடிவுக்கு வந்தது.