தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் மோடியின் நண்பர் சுபாஷ் சந்திராவுக்கு ஆதரவான தீர்ப்புக்கு இடைக்காலத் தடை

1 Sept 2026, 9:24 pm
கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் மோடியின் நண்பர் சுபாஷ் சந்திராவுக்கு ஆதரவான தீர்ப்புக்கு இடைக்காலத் தடை

கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம் மோடியின் நண்பர் சுபாஷ் சந்திராவுக்கு ஆதரவான தீர்ப்புக்கு இடைக்காலத் தடை

புதுதில்லிபிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர் சுபாஷ்சந்திரா (ஜீ டிவி - எஸ்செல்குழுமம்) பல வங்கிகளிடம் (தனியார் - பொதுத்துறை) ரூ.22,006கோடி கடன் வாங்கியிருந்தார். அந்தக் கடனைத் திருப்பித் தரமுடியாததால், அவரைத் ‘திவாலானவராக’ (கடன்சுமையில் சிக்கியவராக) அறிவிக்கக் கோரிவங்கிகள் வழக்கு தொடர்ந்தன. இதன்மூலம் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்து கடனுக்கான தொகையை சரிக்கட்டலாம் என்பதே வங்கிகளின் திட்டம்.

ஆனால் இந்த விவகாரத்தை கையாண்ட ஒன்றிய மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பா யத்தின் மூன்றாவது நீதிபதி நிலேஷ் சர்மா கடந்த வாரம்,“ரூ.22,006 கோடி நிலுவைத் தொகைக்கு, கடன் கொடுத்த வங்கிகளிடம் ரூ.6.5 கோடி மட்டுமே கொடுத்தால் போதும்” என சுபாஷ் சந்திராவின் கோரிக்கையை தீர்ப்பாயத்தின் தீர்ப்பாகஒப்புதல் வழங்கியுள்ளார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் கிளம்பின.இந்தியா கூட்டணி“ஏழைகளுக்கு கொடுக்கப்படும் ரூ. 1,000 தவணைத் தொகை கூட கைநழுவிப் போய்விடக் கூடாது என்பதற்காக வங்கி ஒரு அடியாளைப் பாதுகாப்பிற்குவைத்திருக்கிறது.

ஆனால், நச்சுத்தனமான ‘கோடி மீடியா’ ஊடகங்களும், கொள்ளைக் கார்ப்பரேட் முதலாளிகள் தமக்கென்றே ஒரு அரசையே (மோடி அரசு) வைத்துள்ளனர்” என ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம்தெரிவித்தன. கடன் கொடுத்த வங்கிகளும் இதுதொடர்பாக மேல்முறையீடு செய்தன.

இந்நிலையில், வங்கிகளின் மேல்முறையீட்டு மனு தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் திங்களன்று விசாரணைக்குவந்தது. வாதங்களுக்குப் பிறகு 5 பேர் கொண்ட தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் அமர்வு,“இந்த விவகாரத்தில் தீர்ப்பு வழங்கிய மூன்றாவது நீதிபதி நிலேஷ் சர்மாவின் உத்தரவுக்கு தடை விதிக்கிறோம். அதே சமயம்மறு உத்தரவு வரும் வரை சுபாஷ்சந்திரா தனது சொத்துக்களை நேரடியாகவோ அல்லது மறைமுக

மாகவோ விற்பனை செய்யக் கூடாது, யார் பெயரிலும் மாற்றக்கூடாது.

இந்த விவகாரம் தொடர்பாக சுபாஷ் சந்திரா உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.வரலாற்றில் முதன்முறைதேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி அனுபிந்தர் சிங் கிரேவாலின் சுபாஷ் சந்திராவின் கடந்த உத்தரவுதொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் (வங்கிகளின் மேல்முறையீட்டு மனுவிற்கு பிறகு) கூட்டினார். இந்தக் கூட்டத்தின் முடிவில் சுபாஷ் சந்திராவின் விவகாரத்தை மீண்டும் விசாரிக்க தலைமை நீதிபதி அனுபிந்தர் சிங் கிரேவாலின் 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வை அமைத்தார்.

இந்த அமர்வே சுபாஷ் சந்திராவிற்கு சாதகமாக கடந்த வாரம் வழங்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைத்துள்ளது. தேசியநிறுவனச் சட்டத் தீர்ப்பாய வரலாற்றில் ஒரு வழக்கை விசாரிப்பதற்காக 5 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்படுவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.