ஒரு தமிழ் வார்த்தை கூட இல்லாத என்சிஇஆர்டி இணையதள பக்கம்! ஒன்றிய அரசுக்கு ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கண்டனம்
21 May 2026, 11:08 pm
<p><strong>ஒரு தமிழ் வார்த்தை கூட இல்லாத என்சிஇஆர்டி இணையதள பக்கம்! ஒன்றிய அரசுக்கு ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கண்டனம்</strong></p><p>திண்டுக்கல், மே 21 - ஒன்றிய அரசின் என்சிஇஆர்டி இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள கோடைப் பயிற்சி முகாம் விளம்பர ஸ்டைடுகளில் ஒரு தமிழ் வார்த்தை கூட இடம்பெறாததற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், தமது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: என்சிஇஆர்டி (NCERT) எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இந்தி மொழி மட்டுமே பிரதானமாக உள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பாரதிய பாஷா கோடை பயிற்சி முகாம் (Bharatiya Bhasha Summer Camp 2026) பற்றிய ஸ்லைடுகளில் தமிழ் மொழியின் ஒரு வார்த்தை கூட இல்லை. இந்தி, சமஸ்கிருதம், அரபு உள்ளிட்ட சில மொழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இந்தி மற்றும் சமஸ்கிருதம் மட்டுமே பிரதானமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய சமக்ர சிக்ஷ அபியான் (SSA) திட்ட நிதியை வழங்காமல் தமிழ்நாட்டு மாணவர்களை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது, தமிழ் மொழியின் ஒரு வார்த்தை கூட இல்லாமல் ஒன்றிய அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் இணையதள பக்கத்தை மாற்றி உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. ஒன்றிய கல்வி அமைச்சகம் உடனடியாக தலையிட்டு இந்த இணையதளத்தில் தமிழ் மொழியும் இடம்பெறும் வகையில் உரிய மாற்றங்களை செய்திட வேண்டும். இவ்வாறு ஆர். சச்சிதானந்தம் எம்.பி. கூறியுள்ளார்.</p>
