கல்வியை காவிமயமாக்க மோடி அரசு தீவிரம் என்சிஇஆர்டியில் ஆர்எஸ்எஸ் தலைமையில் புதிய குழு
14 Jul 2026, 9:26 pm

கல்வியை காவிமயமாக்க மோடி அரசு தீவிரம் என்சிஇஆர்டியில் ஆர்எஸ்எஸ் தலைமையில் புதிய குழு

புதுதில்லி என்சிஇஆர்டி (NCERT) என்பது ‘தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில்’ ஆகும். இது 1961ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒன்றிய அரசின் தன்னாட்சி அமைப்பாகும்.ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு பள்ளிக் கல்வி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி, பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்களை உருவாக்கு கிறது. தற்போது ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப் பாட்டில் உள்ளது. தற்போது என்சிஇஆர்டி ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப் பாட்டில் உள்ளது.

இந்நிலையில், இந்த என்சிஇ ஆர்டி பாடப்புத்தகக்குழு ஆர் எஸ்எஸ் ஆதரவு பெற்ற என்ஜிஓ ஊழியர் தலைமையில் இயங்கு வது கண்டறியப்பட்டுள்ளது. என்சிஇஆர்டி பள்ளி பாடப்புத்த கங்களைத் தயாரிப்பதற்காக 22 ஆலோசகர்களைக் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழுவிற்கு, ஆர்எஸ்எஸ் அமைப்பு டன் நேரடி தொடர்புடைய ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் (என்ஜிஓ) ஊழியர் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ‘சம்வித் ரிசர்ச் பவுண்டேஷன்’ (Samvit Research Foundation) என்ற என்ஜிஓ-வின் நிர்வாக இயக் குநரான கஜானன் லோண்டே என்பவர் இந்தக் குழுவிற்குத் தலை மை தாங்குகிறார். கடந்த 3 ஆண்டு களாக என்சிஇஆர்டி தலைமைய கத்தின் தரைதளத்தில் ‘புரோகிராம் அலுவலகம்’ என்ற பெயரில் இந்தக் குழு இயங்கி வருகிறது. சம்வித் நிறுவனம், ஒன்றிய கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப் பட்ட ‘இந்திய அறிவுசார் அமைப்பு (ஐகேஎஸ்)’ மையமாகக் கரு தப்படுகிறது. சமீபத்திய பாடப்புத்த கங்களில் ஐகேஎஸ் என்ற பெய ரில் பல மாற்றங்கள் புகுத்தப்பட் டுள்ளன. உதாரணமாக, 11ஆம் வகுப்பு ஆயுர்வேதப் பாடத்தில், அதன் பழமை மிகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது அம்பலமாகி யுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மர்மம்

இந்தக் குழுவை உருவாக்கிய உத்தரவு, அதன் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் ஊதியம் குறித்த விவரங்களைக் கோரி ‘தி டெலிகிராப்’ நாளிதழ் தகவல் அறி யும் உரிமை சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. ஆனால், என்சிஇஆர்டி தரப்பில், “இதுபோன்ற தகவல்கள் எங்க ளிடம் இல்லை” என்று கூறி மழுப்பலாகப் பதிலளித்துள்ளது. இருப்பினும், ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான இடி சிஐஎல் (EdCIL)-லிடம் கேட்கப்பட்ட அதே கேள்விக்கு, அவர்கள் அந்த 22 ஆலோசகர்களின் விவரங்க ளை வழங்கியுள்ளனர். இதில் என்சிஇஆர்டியின் பரிந்துரைப் படியே ஆலோசகர்கள் நியமிக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

குழுவின் சம்பளம்

மேலும் அந்த குழுவின் சம்ப ளமும் வெளியாகியுள்ளது. குழுவின் முதன்மை தலைமை ஆலோசகருக்கு மாதம் ரூ. 1.5 லட்சம், தலைமை ஆலோச கருக்கு ரூ.1.2 லட்சம், மூத்த ஆலோ சகருக்கு ரூ. 1 லட்சம், ஆலோசக ருக்கு ரூ. 80,000 என சம்பளம் வாரி இறைக்கப்படுகிறது. இந்தக் குழுவிற்கு எந்தவிதமான வெளிப்படைத்தன்மை இல்லா மல், பாடப்புத்தகத் தயாரிப்பில் மிக முக்கியமான பணிகளைச் செய்து வருவதாக என்சிஇஆர்டி வட்டாரங்கள் மூலம் தகவல் வெளி யாகியுள்ளன.