முந்தய பக்கம்

நயாரா பங்குகளில் பெட்ரோல் விலை ரூ.5 உயர்வு!

3 Oct 2026, 12:34 pm
நயாரா பங்குகளில் பெட்ரோல் விலை ரூ.5 உயர்வு!
<p>தனியார் எரிபொருள் நிறுவனமான நயாராவின் நாடு முழுவதும் உள்ள பங்குகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரு.3-ம் உயர்ந்துள்ளது. </p><p>நயாரா எனர்ஜி நாடு முழுவதும் 7,108 பெட்ரோல் நிலையங்களை நடத்தி வருகிறது. குஜராத்தின் வடிநாரில் ஆண்டுக்கு 2 கோடி டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையையும் இந்நிறுவனம் இயக்கி வருகிறது.</p><p>கடந்த மார்ச் 26-ஆம் தேதி நயாரா எனர்ஜி பெட்ரோல் விலையை ரூ.5-ம், டீசல் விலையை ரூ.3-ம் உயர்த்தியது. பின்னர் சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்ததைத் தொடர்ந்து, ஜூலை 1-ஆம் தேதி அந்த விலை உயர்வை திரும்பப் பெற்றது.</p><p>இந்த நிலையில், நயாரா நிறுவனம் நாடு முழுவதும் உள்ள பங்குகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரு.3-ம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram