தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நயப்பாக்கம் இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்க வலியுறுத்தல்

15 Jul 2026, 11:31 pm
நயப்பாக்கம் இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்க வலியுறுத்தல்
<p><strong>நயப்பாக்கம் இருளர் இன மக்களுக்கு அடிப்படை வசதிகள் வழங்க வலியுறுத்தல்</strong></p><p>திருவள்ளூர், ஜூலை 15- திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், புதுவள்ளூர் ஊராட்சிக்கு உட்பட்ட நயப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட பழங்குடியினக் குடும்பங்கள் நீண்ட காலமாக வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் குடிநீர் வசதி இல்லாத தால், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்ளி ட்டோர் தினமும் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பக்கத்து கிராமத்திலிருந்து தண்ணீர் எடுத்து வரும் அவலநிலை நீடிக் கிறது. மேலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள தனியார் நிறுவனங்கள் சுற்றுச்சுவர் எழுப்பி யுள்ளதால், திறந்தவெளியில் மலம் கழிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ள பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது தங்களின் கண்ணிய மான வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இவர்களின் அவல நிலையைப் போக்க, நயப்பாக்கத்தில் இருளர் இன மக்களுக் கெனத் தனியாகப் பொதுக் கழிப்பிடம் அமைத்துத் தர வேண்டும் மற்றும் பாதுகாக்க ப்பட்ட குடிநீர் வசதியை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பான கோரிக்கை மனுவை, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு தலைமையி லான நிர்வாகிகள், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புதன்கிழமை வழங்கி னர். இந்த நிகழ்வில் சங்கத்தின் ஒன்றிய நிர்வாகிகள் பி.அற்புதம், சின்னராசு, புனிதா மற்றும் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.