தீக்கதிர் முக்கிய செய்திகள்
22 Nov 2025, 4:09 pm

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே

ஒருபுறம், அவர்கள் முழு முஸ்லிம் சமூகத்தையும் அவமதித்து, அவர்களுக்கு எதிராக இந்துக்களை திருப்புகிறார்கள். மறுபுறம், முஸ்லிம் வாக்குகளை கவர உருது மொழியில் சுவரொட்டிகளை வெளியிட்டிருக்கிறார்கள். அப்படியானால் இதுதான் பாஜகவின் அரசியலா?

கர்நாடக அமைச்சர் பிரியங் கார்கே

விண்வெளியில் இருந்து வருவதை விட பெங்களூரு போக்குவரத்தில் வருவது கடினம் என விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கூறியுள்ளார். பெங்களூருவில் கடந்த ஆண்டை விட சராசரி பயண நேரம் 54 நிமிடங்களிலிருந்து 63 நிமிடங்களாக அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற தாமதங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் என்று நான் உறுதி அளிக்கிறேன்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டைப் புறக்கணித்துள்ளதால், பிரதமர் மோடி அதில் தைரியமாக பங்கேற்கிறார். அடுத்த ஜி-20 உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்த உச்சிமாநாட்டிற்குள் மோடி டிரம்ப் உடன் இராஜதந்திர அரவணைப்பை தொடங்குவாரா?

ஏஐஎம்ஐஎம் கட்சி

நேற்று வரை, பாஜக உருது மொழியை வெறுத்தது. அது ஒரு முழு சமூகத்தையும் அவமதிப்பதாக இருந்தது. உருது பேசுபவர்களைப் பற்றி மோச மான செய்திகளைப் பரப்பியது. ஆனால் இன்று அவர்களே முஸ்லிம் வாக்குகளுக்காக உருது சுவரொட்டிகளை வெளியிட்டுள்ளனர். வாக்குக ளைப் பெற பாஜகவினர் எதையும் செய்வார்கள்.