நவில் தொறும் நூல் நயம்: உலக இலக்கியங்களுக்கான ஒரு சாளரம்- ப.முருகன்
8 Mar 2026, 3:42 pm
<p><strong>நவில் தொறும் நூல் நயம்: உலக இலக்கியங்களுக்கான ஒரு சாளரம்</strong></p>
<p>“பெரிதினும் பெரிது கேள்” என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, உலகளாவிய சிறந்த 17 இலக்கியப் படைப்புகளைப் பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் ‘சுண்டக் காய்ச்சிய பால்’ போலத் தொகுத்து வழங்கியுள்ளார் பேராசிரியர் பெ. விஜயகுமார். 115 பக்கங்களில் விரியும் இக்கட்டுரைத் தொகுப்பு, வாசகரை மூல நூல்களைத் தேடி ஓடத் தூண்டும் ஒரு சிறந்த வழிகாட்டியாகும். சமகால அரசியலும் சமூகச் சிக்கல்களும் இந்தியாவின் தற்போதைய பேசுபொ ருளான குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA) குறித்து அ. கரீம் எழுதிய ‘முகாம்’ நாவல், சாதியத்தின் பிடியை விளக்கும் இந்திரா பார்த்தசாரதியின் ‘வேர்ப்பற்று’, மற்றும் மலையாள எழுத்தாளர் சந்தோஷ் குமாரின் ‘வார்த்தைகள்’ எனத் தமிழ்ச் சூழலுக்கு நெருக்கமான படைப்புகளை இதில் ஆசிரியர் ஆழமாக அலசியுள்ளார். ஈழப் போராட்டத்தின் வலிகளைப் பேசும் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல் குறித்த நயமான விமர்சனமும் இதில் இடம்பெற்றுள்ளது. உலக இலக்கியப் பரப்பு வெளிநாட்டு எழுத்தாளர்களின் ஏழு முக்கியப் படைப்புகளை பேராசிரியர் அறிமுகப்படுத்திய விதம் சிறப்பு. ரஷ்யா: டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ மற்றும் ஷோலகோவின் ‘அவன் விதி’. இங்கிலாந்து: ஜார்ஜ் ஆர்வெல்லின் அரசியல் நையாண்டியான ‘அனிமல் பார்ம்’ மற்றும் தாமஸ் ஹார்டியின் ‘தி ரிட்டன் ஆப் தி நேட்டிவ்’. அமெரிக்கா & ஆப்பிரிக்கா: கருப்பின மக்களின் அடிமைத்தனத்தைச் சொல்லும் ஹாரியட் பீச்சர் ஸ்டோவின் உலகப்புகழ் பெற்ற ‘அங்கிள் டாமின் குடிசை’ மற்றும் அப்துல் ரஜாக் குர்னாவின் புலம்பெயர் துயரங்களைப் பேசும் ‘தி லாஸ்ட் கிப்ட்’. வரலாற்றின் சாட்சியம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம், இந்தியப் பிரிவினை, ஹிட்லரின் நாசிசக் கொடுமைகள் மற்றும் வெள்ளை நிறவெறி என உலக வரலாற்றில் நிகழ்ந்த இன அழித்தொழிப்புகளையும், ஒடுக்குமுறைகளையும் இந்தப் படைப்புகள் வாயிலாக ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார். பல மாதங்கள் செலவழித்துப் படிக்க வேண்டிய கனமான படைப்புகளைச் சில மணிநேர வாசிப்பில் உள்வாங்கிக் கொள்ளச் செய்த பேராசிரிய ரின் உழைப்பு பாராட்டத்தக்கது. தீவிர வாசிப்பாளர் களுக்கும், புதிய வாசகர்களுக்கும் இப்புத்தகம் ஒரு மிகச்சிறந்த ‘நூல் அறிமுகக் கையேடு’. நவில் தொறும் நூல் நயம் (நூல் அறிமுகக் கட்டுரைகள்) ஆசிரியர்: பெ. விஜயகுமார் வெளியீடு: பட்டறிவு பதிப்பகம், மதுரை பக்கங்கள்: 130 | விலை: ₹120 தொடர்புக்கு: +91 452 230 2566| மின்னஞ்சல்: reflectionbooks@gmail.com</p>
